Published : 22 Apr 2021 03:13 AM
Last Updated : 22 Apr 2021 03:13 AM
மேஷம்: பழைய வாகனத்தை மாற்றி புதியது வாங்குவீர்கள். வீடு, வாகனம் வாங்க வங்கிக் கடன் கிடைக்கும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் எளிதில் முடியும். மூத்த சகோதரர் உதவுவார்.ரிஷபம்: வெளிநாடு செல்ல முயற்சித்தவர்களுக்கு நல்ல தகவல் வரும். உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். வீட்டுக்குத் தேவையான மின்சாதனங்கள் வாங்குவீர்கள்.மிதுனம்: பணவரவு திருப்திகரமாக இருக்கும். என்றாலும் சேமிக்க முடியாதபடி அடுத்தடுத்து செலவுகள் இருக்கும். சகோதரர் வகையில் நிலவிய குழப்பங்கள் நீங்கி மனநிம்மதி கிட்டும்.கடகம்: பெரிய அளவில் வெற்றி வாய்ப்புகள் தேடி வரும். புது வாகனம், ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் சாதகமாகும்.சிம்மம்: எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்படுவீர்கள். அடிக்கடி உடல் நிலை பாதிக்கக் கூடும். முன்கோபத்தை குறைப்பது நல்லது. உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும்.கன்னி: திட்டமிட்டபடி பயணங்கள் அமையும். நீண்டநாட்களாக விலகியிருந்த நண்பர்கள், உறவினர்கள் மீண்டும் வந்து பேசுவார்கள். திடீர் பணவரவு உண்டு. கலைப்பொருட்கள் சேரும்.துலாம்: பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். நீண்ட நாட்களாக எதிர் பார்த்த தொகை கைக்கு வரும். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு.விருச்சிகம்: கடந்தகால இனிய அனுபவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். பங்கு வர்த்தகத்தில் லாபம் கிடைக்கும். விருந்தினர் வருகை அதிகரிக்கும்.தனுசு: எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். பிள்ளைகள் ஆறுதலாக இருப்பார்கள். வெளிநாட்டிலிருப்பவர்கள், வேற்றுமொழி பேசுபவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும்.மகரம்: சின்னதாக ஒருவித சலிப்பு, வெறுப்பு, தாழ்வுமனப்பான்மை வந்து போகும். கொஞ்சம் நேரம் ஒதுக்கி யோகா, தியானம் செய்வது நல்லது. எதிலும் நிதானமுடன் செயல்படுங்கள்.கும்பம்: உங்களின் முன்னேற்றத்துக்கு எத்தனை தடைகள் வந்தாலும் போராடி வெற்றி பெறும் சக்தி கிடைக்கும். பெரிய மனிதர்களுடன் நட்பு ஏற்படும். தாயாரின் ஆதரவு உண்டு.மீனம்: தோற்றப் பொலிவு கூடும். உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். சாவாலான காரியங்களைக் கூட சர்வ சாதாரணமாக முடித்துக் காட்டுவீர்கள். திடீர் பயணம் ஏற்படக் கூடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT