Published : 22 Apr 2021 03:14 AM
Last Updated : 22 Apr 2021 03:14 AM

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து கமீலா நாசர் திடீர் விலகல் :

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயலாளர் கமீலா நாசர், அக்கட்சியில் இருந்து விலகினார்.

இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் (தலைமை அலுவலகம்) சந்தோஷ்பாபு நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநிலச் செயலாளராக (சென்னை மண்டலம் கட்டமைப்பு) இருந்தவர் கமீலா நாசர். தனிப்பட்ட காரணங்களால் தனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஏப் ரல் 20-ம் தேதி முதல் அவர் கட்சியின் அனைத்து விதமான பொறுப்புகளில் இருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விடுவிக்கப்படுகிறார்’ என்று தெரிவித்துள்ளார்.

மத்திய சென்னையில் போட்டி

நடிகர் நாசரின் மனைவியான கமீலா நாசர், மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கப்பட்டதில் இருந்தே அக்கட்சியில் செயல்பட்டு வந்தார். 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இத்தேர்தலில் அவர் 11.74 சதவீத வாக்குகளைப் பெற்று தோல்வி அடைந்தார்.

தற்போது நடந்த முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தியில் இருந்த அவர், தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.

குடும்பத்தை கவனிக்க...

இது தொடர்பாக கமீலா நாச ரிடம் கேட்டபோது, “கட்சிக்காக முழு நேரம் பணியாற்றுவதால் குடும்பத்தை கவனிக்க முடிய வில்லை. எனது மகன் நடக்க முடியாமல் கஷ்டப்படுகிறார். மகனை வளர்க்கவும், குடும்பத்தை கவனித்துக் கொள்வதற்காகவும் பதவியை ராஜினாமா செய்தேன். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பே எனது பதவியை ராஜி னாமா செய்வதாக கடிதம் கொடுத்து விட்டேன். அவர்கள் தற்போதுதான் அறிவிக்கின்றனர். சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட அனைவரும் விருப்பு மனு அளித்தோம். வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தால் போட்டியிட்டு இருப்பேன். சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால் ராஜி னாமா செய்ததாக சொல்வது தவறானது. கட்சியில் இல்லை என்றாலும் மக்கள் சார்ந்த பணி களில் தொடர்ந்து ஈடுபடுவேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x