Published : 22 Apr 2021 03:14 am

Updated : 22 Apr 2021 03:14 am

 

Published : 22 Apr 2021 03:14 AM
Last Updated : 22 Apr 2021 03:14 AM

பணமதிப்பிழப்பில் சந்தித்ததை போலவே - கரோனா தடுப்பூசி போடுவதிலும் பொதுமக்கள் கடும் பாதிப்பு : ராகுல் காந்தி கடும் விமர்சனம்

புதுடெல்லி

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தன்னை தனிமைப்படுத்திக்கொண் டுள்ளார். இந்நிலையில், மத்திய அரசின் கரோனா தடுப்பூசி விநியோக திட்டத்தை விமர்சனம் செய்து ட்விட்டரில் ராகுல் காந்திகூறியிருப்பதாவது:

பாஜக தலைமையிலான மத்திய அரசு 5 ஆண்டுகளுக்கு முன் பணமதிப்பிழப்பு நடவடிக்கையைத் திட்டமிடாமல் அமல்படுத்தி மக்களை நீண்ட வரிசைகளில் நிற்க வைத்தது. அதேபோல் தற்போது கரோனா தடுப்பூசி விஷயத்திலும் நடந்து கொள்கிறது.


மத்திய அரசின் நடவடிக்கை யால் தடுப்பூசி விலை நிர்ணயத்தில் இடைத்தரகர்களின் ஆதிக்கம் அதிகரிக்கும். மேலும் ஏழைகளுக்கு தடுப்பூசி கிடைக்கும் என்ற உத்தரவாதமும் இல்லை. சில தொழிலதிபர்கள் ஆதாயம் அடைய மக்களை மீண்டும் பணம், ஆரோக்கியம், வாழ்க்கையை இழந்து நீண்ட வரிசைகளில் நிற்கவைக்கப் போகிறது. தடுப்பூசி விநியோகத்தில் எந்தவித திட்டமிடலோ, பகிர்வு கொள்கையோ அரசிடம் இல்லை” என்று சாடியுள்ளார்.



Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x