Published : 21 Apr 2021 03:15 AM
Last Updated : 21 Apr 2021 03:15 AM

கரோனா பரவல் காரணமாக - யுஜிசி நெட் தேர்வு தள்ளிவைப்பு :

யுஜிசி நெட் தேர்வு மீண்டும் தள்ளிவைக்கப்படுவதாக தேசிய தேர்வுமுகமை (என்டிஏ) அறிவித்துள்ளது.

உதவிப் பேராசிரியர், இளநிலை ஆராய்ச்சியாளர் பணிக்கான தகுதியை நிர்ணயம் செய்யயுஜிசி - நெட் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இதைதேசிய தேர்வு முகமை (என்டிஏ)நடத்துகிறது. கடந்த 2020 டிசம்பரில் நடக்க இருந்த நெட் தேர்வு, கரோனா பாதிப்பு காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. கரோனாபாதிப்பு குறைந்ததும் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு கடந்த பிப்.2-ம் தேதி தொடங்கி மார்ச் 9-ம் தேதியுடன் நிறைவுபெற்றது.

தொடர்ந்து, மே 2 முதல் 7 வரையும், 10, 11, 12, 14 மற்றும் 17 ஆகியதேதிகளில் 81 பாடங்களுக்கான தேர்வு நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே, கரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால் யுஜிசி நெட் தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில், யுஜிசி நெட் தேர்வு தள்ளிவைக்கப்படுவதாக என்டிஏ அறிவித்துள்ளது. தேர்வுக்கான புதிய தேதி 15 நாட்களுக்கு பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் தேர்வு குறித்த சந்தேகங்களுக்கு 011 - 40759000 என்ற தொலைபேசி எண் அல்லது ugcnet@nta.ac.inஎன்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.எஸ்.சி தேர்வும் தள்ளிவைப்பு

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் குரூப்-பி. குரூப்-சி பணியிடங்கள் எஸ்எஸ்சி எனப்படும் பணியாளர் தேர்வாணையம் மூலமாக நிரப்பப்படுகின்றன. இந்த தேர்வுகள் ஏப்.12-ம் தேதிதொடங்கியது. ஏப்.27-ல் முடிவடைய இருந்த நிலையில் ஒருங்கிணைந்த மேல்நிலை அளவிலான தேர்வுகள் (நிலை-1) ஏப்.20முதல் தள்ளிவைக்கப்படுவதாகவும், புதிய தேர்வு தேதி உரியகாலத்தில் அறிவிக்கப்படும் என்றும் பணியாளர் தேர்வாணையம் அறிவி்த்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x