Published : 20 Apr 2021 03:13 am

Updated : 20 Apr 2021 03:13 am

 

Published : 20 Apr 2021 03:13 AM
Last Updated : 20 Apr 2021 03:13 AM

மன்மோகனுக்கு கரோனா வைரஸ் தொற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி :

மன்மோகன் சிங்

புதுடெல்லி

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, அவர் சிகிச்சைக்காக டெல்லியில்உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங்குக்கு கரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருந்தன. இதைத் தொடர்ந்து நேற்று அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது. இதில் மன்மோகன் சிங்குக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.


இதையடுத்து, டெல்லி எய்ம்ஸ்மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் நேற்று மாலை சேர்க்கப்பட்டுள்ளார். மன்மோகன் சிங் குக்கு டாக்டர்கள் குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதனிடையே, நாடு முழுவதும்கரோனா தொற்று தீவிரமாக பரவிவரும் நிலையில், கரோனாவை சமாளிக்க மேற்கொள்ள வேண்டிய 5 அம்ச வழிமுறைகள் குறித்துபிரதமர் மோடிக்கு மன்மோகன் சிங் நேற்று முன்தினம் கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.

தடுப்பூசி இறக்குமதி

தடுப்பூசி போடும் பணிகளைமத்திய அரசு விரைவுபடுத்தவேண்டும் என்றும் வெளிநாடுகளின் தடுப்பூசி மருந்துகளை அனுமதித்து இறக்குமதி செய்ய வேண்டும் என்றும் அந்தக்கடிதத்தில் மன்மோகன் கூறியிருந்தார்.

ஹர்ஷ் வர்தன் பதில்

மன்மோகனுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பதிலளித்துள்ளார். ட்விட்டரில் அவர் வெளியிட்ட பதிவில்,‘‘காங்கிரஸ் மூத்த தலைவர்கள்சிலர் தடுப்பூசி குறித்து பொறுப்பற்ற முறையில் கருத்துக்களை கூறுவதன் விளைவாக, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலேயே முன்களப் பணியாளர்களுக்கும், மூத்த குடிமக்களுக்கும் தடுப்பூசி போடும் சதவீதம் தேசிய சராசரிக்கும் குறைவாக இருக்கிறது.

உங்கள் கட்சி எதிர்மறையான கருத்துக்களை பரப்பினாலும் உங்களின் மேலான ஆலோசனை களை உங்கள் மீதான மதிப்புக்காகவும், தேசத்தின் நலனுக்காக கூறியதாகவும் எடுத்துக்கொள்கிறேன். அதேநேரம் உங்கள் மதிப்புமிக்க ஆலோசனைகளை உங்கள் காங்கிரஸ் கட்சித் தலைவர்களும் பின்பற்ற வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.


Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x