Published : 20 Apr 2021 03:14 AM
Last Updated : 20 Apr 2021 03:14 AM

தொழிலாளர்களுக்கு கரோனா தொற்று பரவாமல் தடுக்க - தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றும் ராம்கோ சிமென்ட்ஸ் :

சென்னை

ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவனம் தனது ஆலத்தியூர், அரியலூர் ஆலைகளில் கரோனாவால் ஊழியர்கள் பாதிக்கப்படாமல் இருக்க தீவிர பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் நெறிகளை கடந்த ஏப்.12-ம் தேதி முதல் பின்பற்றி வருகிறது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:

தொழிலாளர்களுக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டாலோ, அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டாலோ தொழில் சுகாதாரமையத்தை அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளது. 45 வயதுக்கு மேற்பட்டஊழியர்கள், அவர்களது குடும்பத்தினர், ஆசிரியர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள் கட்டாயம் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது.

வெளி மாநிலங்களில் இருந்துவருபவர்கள் கட்டாயம் கோவிட்-19பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். திருமணம், துக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்கள் 3 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள். உறவினர்களை அழைக்க வேண்டாம் என தொழிலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொழிலாளர்கள் அனைவரும் மின்னணு பாஸ் பதிவுசெய்ய வேண்டும். அனைவரும் இரவு 9 மணிக்குள் குடியிருப்புகளுக்கு சென்றுவிட வேண்டும். பூங்காக்கள், கடைகளில் கூட்டம் சேருவது ஒரு மாதத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

தொழிற்சாலை, நகரியத்தின்நுழைவுவாயில்களில் கைகழுவும்வசதி அதிகரிக்கப்பட்டுள்ளது. முகக் கவசம் அணிதல், உடல்வெப்பநிலை பரிசோதனை அனைவருக்கும் கட்டாயம். முகக் கவசம் இல்லாதவர்களுக்கு அதைவழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொது பார்வையாளர்கள், சர்வீஸ் இன்ஜினீயர்கள், சப்ளையர்கள் பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுவார்கள். குறிப்பிட்ட கால இடைவெளியில் கிருமிநாசினி கொண்டு பணியிடங்கள் தூய்மைப்படுத்தப்படும்.

கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டதொழிலாளர்கள், அவர்களின் குடும்பத்தினரை பராமரிக்க தனிமைப்படுத்தல் வளாகங்கள் உருவாக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையானவை வழங்கப்படுகின்றன. அவசிய தேவையெனில் மட்டும் சமூக இடைவெளியுடன் கூட்டங்கள் நடத்தப்படும். தொடுதல் இல்லாத வருகைப் பதிவேடு அமலில் உள்ளது. நகரியத்தில் சுகாதாரத் துறையுடன் இணைந்து தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகின்றன. l

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x