Published : 20 Apr 2021 03:14 AM
Last Updated : 20 Apr 2021 03:14 AM

கொடைக்கானலில் மேல்மலைப் பகுதியின் - இயற்கை அழகை குடும்பத்துடன் ரசித்த ஸ்டாலின் :

கொடைக்கானல் மேல்மலைப் பகுதி மன்னவனூர், கூக்கால் மலைகிராமங்களில் இயற்கை எழிலை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று தனது குடும்பத்தினருடன் கண்டு ரசித்தார்.

சென்னையில் இருந்து 2 தனி விமானங்கள் மூலம் ஸ்டாலின், மனைவி துர்கா ஸ்டாலின், மகன்உதயநிதி ஸ்டாலின், மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன் உள்ளிட்ட குடும்பத்தினர் 16 பேருடன், மதுரை வந்து அங்கிருந்து திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு கடந்த வெள்ளிக்கிழமை கார்களில் வந்தனர்.

அவர்கள் கொடைக்கானல் பாம்பார்புரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கி இருந்தனர். கடந்த 3 நாட்களாக ஸ்டாலின் விடுதியை விட்டு வெளியில் வரவில்லை. அவரது மகன் உதயநிதிஸ்டாலின் மட்டும் நடிகர் விவேக்மறைவுக்கு அஞ்சலி செலுத்த சென்னை சென்றுவிட்டு கடந்தசனிக்கிழமை இரவே கொடைக்கானல் திரும்பினார்.

கொடைக்கானல் வந்தது முதல் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் உள்ளிட்ட குடும்பத்தினர் யாரும் விடுதியை விட்டு வெளியில் வராத நிலையில், நேற்று விடுதியில் இருந்து கார் மூலம் கொடைக்கானல் மேல்மலைப் பகுதியான மன்னவனூர், கூக்கால் மலைக்கிராமப் பகுதிக்கு அவர்கள் சென்றனர்.

மன்னவனூரில் உள்ளமத்திய அரசின் செம்மறி ஆடுகள்உரோம மற்றும் முயல் ஆராய்ச்சி மையத்தை பார்வையிட்டனர். அங்கு வளர்க்கப்படும் உரோமங்கள் மிகுந்த ஆட்டுக்கூட்டத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

முயல் பண்ணையில் அதிக எடை கொண்ட மெகா முயல்களை கண்டு ரசித்தனர். தொடர்ந்து வனத்துறைக்குச் சொந்தமான மன்னவனூர் சுற்றுச்சூழல் பூங்காவுக்குச் சென்று அங்குள்ள ஏரி உள்ளிட்ட இயற்கை எழிலை கண்டு ரசித்தனர். பின்னர், கூக்கால் மலை கிராமத்துக்குச் சென்று அங்குள்ள ஏரி மற்றும் மலைப்பகுதியின் எழிலைக் கண்டு ரசித்தனர். இதையடுத்து தங்கியிருந்த விடுதிக்குத் திரும்பினர்.

4 நாட்கள் ஓய்வுக்காக திமுகதலைவர் மு.க.ஸ்டாலின் கொடைக்கானல் வந்த நிலையில், குடும்பத்தினருடன் இன்று சென்னைதிரும்புவார் என எதிபார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x