Published : 19 Apr 2021 03:15 am

Updated : 19 Apr 2021 03:15 am

 

Published : 19 Apr 2021 03:15 AM
Last Updated : 19 Apr 2021 03:15 AM

அமிதாப் படத்தில் ராஷ்மிகா :

ராஷ்மிகா மந்தனா

கன்னடத்தில் 2016-ல் வெளியான ‘கிரிக் பார்ட்டி’ படத்தின் மூலம் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா, விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து தெலுங்கில் நடித்த ‘கீதா கோவிந்தம்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் தமிழ் டப்பிங் வழியே தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமான ராஷ்மிகா, தமிழில் ‘சுல்தான்’ படத்தில் நாயகியாக நடித்திருந்தார். இவர் தற்போது ‘குட்பை’ என்ற இந்தி படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இதில் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடிப்பதால் ராஷ்மிகாவுக்கு வாழ்த்துகள் குவிகின்றன.

‘‘பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் இவ்வளவு சீக்கிரம் இணைந்து நடிப்பேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை. அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்வேன். ‘மிஷன் மஜ்னு’ படத்துக்கு பிறகு, மீண்டும் பாலிவுட்டில் ஒரு நல்ல கூட்டணியுடன் சேர்ந்திருப்பது மகிழ்ச்சி’’ என்கிறார் ராஷ்மிகா.




Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x