Published : 19 Apr 2021 03:16 AM
Last Updated : 19 Apr 2021 03:16 AM

சேலத்தில் 25 தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு : தொற்று தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகள் தீவிரம்

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் உள்ள 25 தெருக்கள் கட்டுப் படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கரோனா தொற்று பரவலை தடுக்க மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

மூன்று பேருக்கு மேல் தொற்றால் பாதிக்கப்பட்டால் அந்த தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், அஸ்தம்பட்டி மண்டலத்தில் அழகாபுரம் கணக்குப் பிள்ளை தெரு, பார்வதி தெரு, முருகன் காடு பெரிய புதூர், குமரன் நகர், காட்டூர் மாடர்ன் பில்டர்ஸ் காலனி ஏ மற்றும் பி, செவ்வாய்பேட்டை நாராயணன் தெரு, வைத்தி தெரு, பாண்டு ரங்கநாதர் கோயில் தெரு, தொட்டு சந்திர ஐயர் தெரு, பழனியப்பா நகர் முதல் குறுக்கு தெரு, மெய்யனூர் ஆலமரத்துக் காடு, சங்கர் நகர் ஆகியவை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும், சூரமங்கலம் மண்டலத்தில் ஆர்.டி.பால்தெரு, ரெட்டிப் பட்டி அம்பேத்கர் நகர், கொண்டலாம்பட்டி மண்டலத்தில் ஜி.ஆர்.நகர், கோவிந்தம்மாள் நகர், குகை நரசிங்கபுரம் தெரு, தொல் காப்பியதெரு, கருங்கல்பட்டி மெயின் ரோடு,ஜாரி கொண்டலாம்பட்டி  ரங்கன் தெரு, அம்மாப்பேட்டை மண்டலத்தில் செல்வா நகர் கே.என்.காலனி, பழனி முத்து தெரு, கிச்சிப் பாளையம் நாராயணன் நகர் 2-வது குறுக்கு தெரு, களரம்பட்டி பிரதான சாலை உள்ளிட்ட 25 தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, அங்கு கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இப்பகுதியில் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு மண்டலத்துக்கும் தலா 90 களப்பணியாளர்கள் வீதம் மொத்தம் 360 களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, தொற்றுத் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இரண்டு களப்பணியாளர்களை கொண்ட குழுவினர் கட்டுப்படுத்தப் பட்ட பகுதிகள் மற்றும் அருகில் உள்ள 200 குடியிருப்புகளுக்குச் சென்று,தொற்று அறிகுறிகள் யாருக்கும் உள்ளதா? என்பதை கண்டறிந்து, அறிகுறி உள்ளவர்களுக்கு சளி தடவல் பரி சோதனைக்கு உட்படுத்தி, தொற்று கண்டறியப்பட்டால் தேவையான சிகிச்சைகள் வழங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ளவர்களுக்கு நோய்எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் வைட்டமின் மாத்திரைகள், கபசுரக் குடிநீர் விநியோகித்தல், அப்பகுதி யில் உள்ள குடியிருப்புகளில் இருந்து யாரும் வெளியில் வராமல் கண்காணித்தல் ஆகிய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x