Published : 17 Apr 2021 03:13 am

Updated : 17 Apr 2021 03:13 am

 

Published : 17 Apr 2021 03:13 AM
Last Updated : 17 Apr 2021 03:13 AM

கரோனா பரவல் அதிகரிப்பால் - ஐசிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு தேர்வு தள்ளிவைப்பு :

சென்னை

கரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக ஐசிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக ஐசிஎஸ்இ செயலாளர் ஜெர்ரி அரதூன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:


நாடு முழுவதும் கரோனா பரவல் அதிகரித்து வருவதைக் கருத்தில்கொண்டு, மே 4-ம் தேதிதொடங்குவதாக இருந்த ஐசிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்புபொதுத்தேர்வுகள் தள்ளிவைக்கப்படுகின்றன. பொதுத்தேர்வுகள் நடத்துவது குறித்து ஜுன் முதல் வாரத்தில் முடிவெடுக்கப்படும்.

10-ம் வகுப்பு மாணவர்களுக்கு..

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு வேறொரு தேதியில் நடத்தப்படும்போது, அதே நாளில் 10-ம் வகுப்புபொதுத்தேர்வை மாணவர்கள் எழுதலாம். அல்லது தேர்வை எழுதாமலும் இருக்கலாம். தேர்வைஎழுதாத மாணவர்களுக்கு எவ்வித பாகுபாடும் பாராமல் மாற்றுமுறையில் தேர்வு முடிவுகள்தயாரிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x