Published : 17 Apr 2021 03:13 AM
Last Updated : 17 Apr 2021 03:13 AM

தெலுங்கு நடிகர் : பவன் கல்யாணுக்கு கரோனா தொற்று :

நாடாளுமன்ற இடைத்தேர்தலை யொட்டி, பாஜக - ஜனசேனா கட்சிகளின் கூட்டணி வேட்பாளர் ரத்ன பிரபாவுக்காக ஜனசேனா கட்சியின் தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

பொதுக்கூட்டங்கள் மற்றும் ஊர் ஊராக சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு பிரச்சாரம் செய்து, ஹைதராபாத் திரும்பிய பவன் கல்யாண் கரோனா பரிசோதனை மேற்கொண்டார்.

இதில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து ஹைதராபாத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் தனிமைபடுத்திக்கொண்டுள்ள பவன் கல்யாண், தனியார் மருத்துவமனையின் உதவியோடு சிகிச்சை பெற்று வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x