Published : 16 Apr 2021 03:11 AM
Last Updated : 16 Apr 2021 03:11 AM

மேஷம்: தடைபட்டிருந்த காரியங்களெல்லாம் நல்ல விதத்தில்முடிவடையும்

மேஷம்: தடைபட்டிருந்த காரியங்களெல்லாம் நல்ல விதத்தில்முடிவடையும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். பங்கு வர்த்தகம் லாபம் தரும்.ரிஷபம்: வேலைச்சுமை அதிகரிக்கும். தவிர்க்க முடியாத பயணங்கள் ஏற்படும். ஓய்வின்றி உழைக்க வேண்டி வரும். வீண் விவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்த்து விடுங்கள்.மிதுனம்: செலவினங்கள் கூடும். நீண்ட நாட்களாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த புகழ்பெற்ற புண்ணிய தலங்களுக்கு சென்று வருவீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.கடகம்: வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல வேலை அமையும். வாகனம் வாங்குவீர்கள். வீட்டை அழகுபடுத்துவீர்கள். நவீன மின் சாதனங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.சிம்மம்: இழுபறியாக இருந்துவந்த வேலைகள் முடியும். தந்தையாரின் உடல்நிலை சீராகும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் சாதகமாகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும்.கன்னி: தைரியம் பிறக்கும். வருங்காலம் பற்றிய பயம் விலகும். பணப்பிரச்சினையை சமாளிக்க வழி கிடைக்கும். சொந்தபந்தங்களிடையே இருந்துவந்த சலசலப்புகள் நீங்கும்.துலாம்: அடுத்தடுத்த செலவுகளால் திணறுவீர்கள். வருமானத்தை பெருக்கும் வழிகளை ஆராய்வீர்கள். தங்க ஆபரணங்களை கவனமாகக் கையாளுங்கள். திடீர் பயணம் ஏற்படும்.விருச்சிகம்: எதிர்மறை எண்ணங்கள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழல் நிலவும். கல்யாணப் பேச்சுவார்த்தை நம்பிக்கை தருவதாக இருக்கும். தாயாரின் ஆதரவு கிடைக்கும்.தனுசு: பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டு. அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பங்கு வர்த்தகத்தில் வருமானம் வரும். வீடு மாற நினைத்தவர்களுக்கு நல்ல வீடு அமையும்.மகரம்: எதையும் சமாளிக்கும் சக்தி கிடைக்கும். ஓரளவு பணவரவு உண்டு. நீண்டகால பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள். மூத்த சகோதரரால் நன்மை உண்டு.கும்பம்: வீட்டை விரிவுபடுத்திக் கட்ட திட்டமிடுவீர்கள். அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கடன் பிரச்சினையை சமாளித்து விடுவீர்கள். அக்கம்பக்கத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.மீனம்: தொட்ட காரியங்கள் துலங்கும். தடைகளை முறியடிப்பீர்கள். இழுபறியாக இருந்துவந்த வேலைகள் முடிவடையும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்களும் உடனடியாக நிறைவேறும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x