Published : 16 Apr 2021 03:12 AM
Last Updated : 16 Apr 2021 03:12 AM

ஹரித்வார் கும்பமேளாவில் 13.51 லட்சம் பேர் புனித நீராடல் : ரயில் நிலையங்களில் கரோனா பரிசோதனை தீவிரம்

ஹரித்வாரில் நடைபெற்ற கும்ப மேளாவில் நேற்று மட்டும் 13.51 லட் சம் பேர் நீராடியதாகத் தகவல் வந் துள்ளது. கும்பமேளாவில் கலந்து கொள்ள வரும் பக்தர்களுக்கு ரயில் நிலையங்களிலேயே கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

உத்தராகண்ட் மாநிலம் ஹரித் வாரில் பிரசித்தி பெற்ற கும்ப மேளா, கடந்த 1-ம் தேதி தொடங் கியது. இது,வரும் 30-ம் தேதியுடன் நிறைவடைகிறது. கும்பமேளாவில் 3-வது ‘சஹி ஸ்நான்’ எனப்படும் புனித நீராடுதலில் நேற்று ஒரே நாளில் 13.51 லட்சம் பேர் பங்கேற்றனர்.

கும்பமேளாவுக்கு வருபவர்கள் கரோனா தொற்று இல்லை என்ற நெகட்டிவ் சான்றிதழுடன் வர வேண்டும். தனி மனித இடை வெளி, முகக்கவசம் அணிவது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என உத்தராகண்ட் மாநில அரசு தெரிவித்துள்ளது. எனி னும் அதிகமாக பக்தர்கள் குவி வதால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுஉள்ளது.

இதற்கு முன் 2010-ம் ஆண்டு நடந்த கும்பமேளாவில், மேஷ சங்கராந்தி நாளில் புனித நீராடுதல் நிகழ்வுக்கு 1.60 கோடி பேர் ஹரித்வாரில் பங்கேற்ற நிலையில் நேற்று கலந்துகொண்டவர்கள் மிகவும் குறைவுதான் எனத் தெரியவந்துள்ளது.

இதனிடையே உத்தராகண்ட் மாநிலத்தில் நேற்று ஒருநாளில் மட்டும் உச்சபட்சமாக 1,953 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள னர். இதில் டேராடூனில் 796 பேர், ஹரித்வாரில் 525 பேர், நைனிடாலில் 205 பேர், உதம் சிங் நகரில் 118 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் 2 நாட்களில் கும்பமேளாவில் பங்கேற்ற சுமார் ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கும்ப மேளா நடைபெறும் பகுதியில் மட்டும் நாளொன்றுக்கு 50 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

இந்த புனித நீராடலுக்குச் சென்று வந்த மக்களுக்கு கரோனா இருந்தால் அவர்கள் மீண்டும் சொந்த மாநிலங்களுக்குச் செல் லும்போது தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கவலை தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து சுகாதாரத் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “கும்பமேளாவுக்கு வருபவர் களுக்கு ரயில் நிலையங்களிலேயே கரோனா பரிசோதனை செய் யப்படுகிறது. அங்கு ரேப்பிட் ஆன் டிஜன் சோதனை செய்யப்படு கிறது. இதன்மூலம் பரிசோதனை முடிவுகள் விரைவில் தெரிவிக் கப்படும். பரிசோதனை முடிவில் பாசிட்டிவ் என வரும்போது அந்த நபர் கரோனா பாதுகாப்பு மையத் துக்கு அனுப்பி வைக்கப்படுகிறார். மற்றவர்கள் கும்பமேளாவில் பங் கேற்க அனுமதிக்கப்படுகின்றனர்” என்றார்.

இதனிடையே போலீஸ் ஐஜி கும்ப் சஞ்சய் கஞ்சியால் கூறும் போது, “மாநில எல்லையில் வாக னங்களை நிறுத்தி பரிசோதனை செய்ததில் 56 ஆயிரம் பேர், கரோனா பரிசோதனை முடிவுகளைக் கொண்டு வரவில்லை எனத் தெரியவந்தது. அதேபோல 9,786 வாகனங்கள் தேவையான அனுமதிச் சான்றையும் வாங்கி வரவில்லை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x