Published : 15 Apr 2021 03:09 AM
Last Updated : 15 Apr 2021 03:09 AM

மேஷம்: மன உளைச்சல் நீங்கும்

மேஷம்: மன உளைச்சல் நீங்கும். குடும்பத்தினருடன் கலகலப்பாக பேசும் சூழல் அமையும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். தாயார் ஆதரவாக இருப்பார். ரிஷபம்: அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்து கொள்ளவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். சிறுசிறு ஏமாற்றம் ஏற்படக் கூடும்.மிதுனம்: மறதி, சோம்பல் வந்து நீங்கும். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளால் டென்ஷன் அதி கரிக்கும். அடுத்தடுத்து செலவுகள் வரும்.கடகம்: குடும்பத்தினரின் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்வீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். அக்கம்பக்கத்து வீட்டாரின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் பயணம் ஏற்படும்.சிம்மம்: பிள்ளைகளால் மதிப்பு கூடும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். கலைப்பொருட்கள் சேரும்.கன்னி: கணவன் - மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். செலவுகளை கட்டுப்படுத்தி சேமிக்கத் தொடங்குவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். துலாம்: உறவினர்கள், நண்பர்களுடன் வரம்பு மீறி பேசி பெயரை கெடுத்துக் கொள்ள வேண்டாம். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. எதிலும் நிதானம் அவசியம்.விருச்சிகம்: திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதரர்களால் சில காரியங்கள் நிறைவேறும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். ஆடை, ஆபரணங்கள் சேரும்.தனுசு: உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும்.மகரம்: வருங்காலத் திட்டங்களில் ஒன்று நிறைவேறும். பிள்ளை களின் தனித் திறமைகளை கண்டறிந்து ஊக்குவிப்பீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.கும்பம்: பால்ய நண்பர்களால் சில காரியங்கள் நிறைவேறும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புது வேலை அமையும். பழைய சிக்கல்களில் ஒன்று தீரும்.மீனம்: உங்களின் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளை களால் பெருமையடைவீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x