Published : 14 Apr 2021 03:13 am

Updated : 14 Apr 2021 03:13 am

 

Published : 14 Apr 2021 03:13 AM
Last Updated : 14 Apr 2021 03:13 AM

மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு நாள் பிரச்சாரம் செய்ய தடை - தேர்தல் ஆணையத்தை கண்டித்து முதல்வர் மம்தா தர்ணா :

கொல்கத்தா

பிரச்சாரம் செய்ய தடை விதித்ததேர்தல் ஆணையத்தைக் கண்டித்து மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி நேற்று திடீர் தர்ணா போராட்டத்தை நடத்தினார்.

மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை 4 கட்டத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் முஸ்லிம் வாக்குகள் மற்றும் மத்திய பாதுகாப்பு படை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக முதல்வர் மம்தா மீது புகார் எழுந்தது. தேர்தல் விதிமுறை மீறி பேசியதாக மம்தா மீது பாஜக புகார் அளித்திருந்தது. இந்த புகார் மீது முதல்வர் மம்தா அளித்த விளக்கம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.


இந்நிலையில் தலைமைத் தேர்தல் ஆணையம் முதல்வர் மம்தா பானர்ஜி, பிரச்சாரத்தில் ஈடுபட ஒரு நாள் தடை விதித்து நேற்று முன்தினம் உத்தரவிட்டது.

இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவைக் கண்டித்து கொல்கத்தாவில் நேற்று திடீர் தர்ணா போராட்டத்தை முதல்வர் மம்தா பானர்ஜி நடத்தினார். கொல்கத்தாவிலுள்ள காந்தி சிலைக்கு எதிராக சக்கர நாற்காலியில் அமர்ந்து இந்தப் போராட்டத்தை அவர் நடத்தினார். தேர்தல் ஆணையத்தின் முடிவைக் கண்டிக்கும் விதமாக தனது கழுத்தில் கருப்புத் துணியையும் அவர் கட்டியிருந்தார். மேலும் கருப்பு நிற முகக் கவசத்தையும் அவர் அணிந்திருந்தார்.

மாயோ சாலையிலுள்ள காந்தி சிலை அருகே காலை 11.40-க்கு வந்த முதல்வர் மம்தா, தனியாக அமர்ந்து இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டார். உடன் கட்சித் தலைவர்களோ, தொண்டர்களோ யாரும் இந்த போராட்டத்தில் பங்கேற்கவில்லை.

இதைத் தொடர்ந்து அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. முதல்வரின் இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் சில மணி நேரம் பரபரப்பு நிலவியது.



Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x