Published : 14 Apr 2021 03:13 AM
Last Updated : 14 Apr 2021 03:13 AM

, ஆடிப்பெருக்கு, தைப்பூசம் ஆகிய - விசேஷ நாட்களில் பத்திரப்பதிவு செய்ய அரசு அனுமதி : கூடுதல் கட்டணம் வசூலிக்க உத்தரவு

சென்னை

சித்திரை முதல் நாள், ஆடிப் பெருக்கு,தைப்பூசம் ஆகிய நாட்களில் கூடுதல்கட்டணத்துடன் பத்திரப்பதிவு செய்யஅனுமதித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பதிவுத் துறை முழுமையாக கணினிமயமாக்கப்பட்டு, ஸ்டார் 2.0 மென்பொருள் வாயிலாக, இணையதளத்தில் பத்திரப்பதிவுகள் நடந்து வருகின்றன. குறிப்பாக, பத்திரப்பதிவுக்கானஆவணங்களை பொதுமக்கள் தாங்களாகவே தயாரிக்கும் வசதியும், பத்திரப்பதிவு முடிந்ததுமே பட்டா மாற்றம் செய்யும் வசதியும் அமலில் உள்ளது.

மேலும், பொதுமக்கள் இணையதளம்வழியாக பத்திரப்பதிவுக்கான டோக்கன் பெற்று, குறிப்பிட்ட நேரத்தில் சென்று பத்திரப்பதிவு மேற்கொண்டு, அந்த பத்திரத்தையும் அன்றே பெறும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

அமாவாசை, புத்தாண்டு உள்ளிட்டகுறிப்பிட்ட விசேஷ நாட்களில் பத்திரப்பதிவு செய்வதை மக்கள் பெரிதும் விரும்புவார்கள். ஆனால், அந்த நாட்கள் பெரும்பாலும் அரசு விடுமுறை நாட்களாக வருவதால் அப்போது பத்திரப்பதிவு மேற்கொள்ள இயலாது.

இந்நிலையில், பத்திரப்பதிவுத் துறையின் வருவாயைப் பெருக்கும் வகையில், ஏப்ரல் 14-ம் தேதி சித்திரை முதல் நாள், ஆகஸ்ட் 3-ம் தேதி ஆடிப்பெருக்கு மற்றும், 2022 ஜனவரி 18-ம் தேதி தைப்பூசம் உள்ளிட்ட நாட்களில் பத்திரப்பதிவை அனுமதிக்க வேண்டும் என பதிவுத் துறை செயலர் பீலா ராஜேஷுக்கு, பதிவுத் துறை தலைவர் பொ.சங்கர் கடிதம் எழுதினார்.

இதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதுதொடர்பாக பதிவுத் துறை தலைவருக்கு பதிவுத் துறை செயலர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

துறையின் வருவாயைப் பெருக்கும் நோக்கில் சித்திரை முதல் தேதி (ஏப்.14), ஆடிப்பெருக்கு (ஆக.3) மற்றும் தைப்பூசம் (2022 ஜன.18) ஆகிய விசேஷ நாட்களில் பதிவு அலுவலகங்களை செயல்பாட்டில் வைத்தால், பொதுமக்கள் சொத்து பத்திரப்பதிவு செய்ய ஏதுவாக இருக்கும். அந்த விடுமுறை நாட்களில் மேற்கொள்ளப்படும் பதிவுகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கவும் அனுமதிக்கும்படி கோரப்பட்டது. அதை அரசு கவனத்துடன் பரிசீலித்து, அந்த நாட்களில் பதிவுஅலுவலகங்களை செயல்பாட்டில் வைத்துபதிவை மேற்கொள்ளவும், கூடுதல் கட்டணம் வசூலிக்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இன்று தொடங்க வாய்ப்பு இல்லை

‘‘மென்பொருளில் கட்டணம் உள்ளிட்ட மாற்றங்கள் செய்யப்பட வேண்டி உள்ளதால், தமிழ் புத்தாண்டு தினமான இன்று(ஏப்.14) இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வாய்ப்பு இல்லை. ஆடிப்பெருக்கு தினத்தில் இது அமல்படுத்தப்படும். கூடுதல்கட்டணமாக ரூ.200 வசூலிக்க வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து பின்னர் அறிவிக்கப்படும்’’ என்று பதிவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x