Published : 12 Apr 2021 03:18 AM
Last Updated : 12 Apr 2021 03:18 AM

சர்வதேச சட்டங்களின்படியே - இந்திய கடல் பகுதியில் போர்க் கப்பல் பயிற்சி : அமெரிக்க ராணுவம் விளக்கம்

வாஷிங்டன்

சர்வதேச சட்டங்களின்படியே இந்திய கடல் பகுதியில் அமெ ரிக்க போர்க் கப்பல் பயிற்சி மேற்கொண்டதாக அமெரிக்க ராணுவ செய்தித் தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.

லட்சத்தீவுகள் அருகே இந்தியாவின் பிரத்தியேக பொருளாதார மண்டலமாக வரையறுக்கப்பட்ட கடல் பகுதியில் கடந்த 7-ம் தேதிஅமெரிக்க போர்க் கப்பலான ‘யுஎஸ்எஸ் ஜான்பால் ஜோன்ஸ்’ பயணம் செய்து பயிற்சி மேற்கொண்டது.

மத்திய அரசின் முன் அனுமதியை பெறாமல் அமெரிக்க போர்க் கப்பல் சென்றதற்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்தது. தூதரக ரீதியாகவும் இந்தியா தனது கவலையை அமெரிக்காவிடம் தெரிவித்தது. ஐ.நா.சபையின் கடல் சட்டங்களும் குறிப்பிட்ட நாட்டின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்தில் மற்ற நாடுகள் முன் அனுமதி பெறாமல் போர்ப் பயிற்சியில் ஈடுபடுவதை அனுமதிக்கவில்லை என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

இந்நிலையில், வாஷிங்டனில் உள்ள அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனின் ராணுவ செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில், ‘‘சர்வதேச சட்டங்களின்படியே மாலத்தீவு அருகே உள்ள கடல் பகுதியில் அமெரிக்க போர்க் கப்பல் யுஎஸ்எஸ் ஜான்பால் ஜோன்ஸ் பயிற்சி மேற்கொண்டது. இது வழக்கமான நடவடிக்கைதான். கடல் பகுதியில் எங்களுக்கு உள்ள உரிமை, சுதந்திரத்தின்படி நாங்கள் செயல்பட்டுள்ளோம். கடலில் பிரத்தியேக பொருளாதார மண்டலப் பகுதியில் செல்வதற்கு முன் அனுமதி பெற தேவையில்லை’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x