Published : 12 Apr 2021 03:19 AM
Last Updated : 12 Apr 2021 03:19 AM

கரோனா தடுப்பூசிக்கு ஆதாரை அடிப்படையாக பயன்படுத்துவது பொருத்தமற்றது : அரசின் முடிவை கைவிட மா. கம்யூ., கோரிக்கை

கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆதார் அடையாள அட்டை அவசியம் என்ற அரசின் முடிவு கைவிடப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் செயலாளர் ராஜாங்கம், புதுச் சேரி தலைமை செயலர் மற்றும் சுகாதாரத்துறை செயலர் ஆகி யோருக்கு அனுப்பியுள்ள மனு வில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரி மாநிலத்தில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை இளம் தலைமுறையினரையும் பாதித்துள்ளது. எனவே புதுச்சேரி அரசு இதனை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப் பூசி போட வேண்டும்.

தடுப்பூசி தட்டுப்பாடின்றி கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். தடுப்பூசி போட்டுக் கொள்வதில் ஒரு பகுதி மக்களுக்கு உள்ள தயக்கத்தை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கவனத் தில் கொண்டு தனியார் மருத்துவமனைகளை அரசு கையகப்படுத்தி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கஏற்பாடு செய்ய வேண்டும். தேவையான மருத்துவர் மற்றும் செவிலியர்கள், சுகாதார பணியாளர்களின் காலிப் பணியிடங்களை நிரப்பவும் தேவைக்கேற்ப மருத்துவ பணி யாளர்கள் பணியில் அமர்த்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், ஏப்ரல் 11 (நேற்று) முதல் 14 வரை தடுப்பூசி முகாமை நடத்திட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த விளம்பரங்களில் ஆதார் அட்டை மட்டுமே ஏற்றுக் கொள்ளக்கூடிய அடையாள ஆவணமாக குறிப்பிட்டுள்ளது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை பரிந்துரையின்படி ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், மத்திய தொழிலாளர் துறை காப்பீட்டு அட்டை, மக்கள் பிரதிநிதி களின் அடையாள அட்டை, நிரந்தரவங்கிக்கணக்கு அல்லது தபால் நிலையத்தில் உள்ள பாஸ்புக், ஓய்வூதிய அடையாள அட்டை போன்ற பல அடையாள அட்டை களை பொதுமக்கள் பயன்படுத்தி தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று அறிவித்திருக்கிறது.

89 சதவீதம் மக்கள் மட்டுமே ஆதார் அடையாள அட்டையை பெற்றுள்ளதாக ஆதார் ஆணை யம் தெரிவித்துள்ள நிலையில், ஆதாரை தடுப்பூசிக்கு அடிப் படையாக பயன்படுத்துவது பொருத்தமற்ற நடவடிக்கை ஆகும். ஆதார் அட்டை இல்லாதவர்கள் இதனால் பாதிப்பிற்கு உள்ளாக நேரிடும்.

எனவே புதுச்சேரி அரசு தடுப்பூசி முகாமிற்கு செய்யக்கூடிய விளம்பர நடவடிக்கைகளில் மத்திய அரசு அறிவித்துள்ள இதரஅடையாள அட்டைகளை மக் கள் பயன்படுத்தி தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்ற முறையில் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x