Published : 11 Apr 2021 03:15 AM
Last Updated : 11 Apr 2021 03:15 AM

முதல் ஆட்டத்தில் வெற்றி பெறுவதைவிட சாம்பியன் பட்டம் வெல்வதே முக்கியம் : மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா கருத்து

சென்னை

ஐபிஎல் டி 20 தொடரில் முதல் ஆட்டத்தில் வெற்றி பெறுவது முக்கியம் இல்லை சாம்பியன் பட்டம் வெல்வதுதான் முக்கியம் என பெங்களூருராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்தார்.

ஐபிஎல் தொடரில் நேற்றுமுன்தினம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது விராட் கோலிதலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இந்த வெற்றியில் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷால் படேல், அதிரடி பேட்ஸ்மேன் டி வில்லியர்ஸ் ஆகியோர் முக்கியபங்கு வகித்தனர். மும்பை அணியை159 ரன்களுக்குள் மட்டுப்படுத்த ஹர்ஷால் படேல் உதவினார்.

முக்கியமான கட்டங்களில் விக்கெட் வீழ்த்திய அவர், கடைசி ஓவரில் 3 விக்கெட்களை வீழ்த்தி ஒரு ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து அசத்தியிருந்தார். அதேவேளையில் இலக்கை விரட்டிய போது ஒரு கட்டத்தில் 23 பந்துகளில் 38 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் டி வில்லியர்ஸ் தனது அசாத்தியமான பேட்டிங்கால் வெற்றியை எளிதாக்கினார். முக்கியமாக டிரெண்ட் போல்ட் வீசிய 18-வது ஓவரில் 15 ரன்களும், அடுத்த ஓவரில்12 ரன்களும் விளாசப்பட்டது.

ஆட்டம் முடிவடைந்ததும் மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறும்போது, “சாம்பியன் பட்டம் வெல்வதுதான் முக்கியம் என நான் நினைக்கிறேன்,முதல் ஆட்டத்தில் வெற்றி பெறுவது அல்ல. கடுமையாக போராடினோம். ஆட்டத்தை நாங்கள் எளிதாக செல்லவிடவில்லை. பேட்டிங்கில் நாங்கள் 20 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம். சில தவறுகளை நாங்கள் செய்தோம். இது நிகழக்கூடியதுதான். அதில் இருந்து நாங்கள் நகர்ந்து செல்லவேண்டும்.

மார்கோ ஜேன்சன் நாங்கள் கண்டறிந்த திறமையான வீரர்தான். 4 ஓவர்களே மீதமிருந்த நிலையில் டி வில்லியர்ஸ், டேனியல் கிறிஸ்டியன் களத்தில் இருந்தனர். அவர்களை வெளியேற்ற முயற்சி செய்யும் விதமாகவே அந்த சூழ்நிலையில் பும்ரா, டிரெண்ட் போல்ட்டை பந்துவீசச் செய்தோம். ஆடுகளம் பேட்டிங் செய்ய எளிதாக இல்லை. சில பந்துகள் மெதுவாக நின்று வருகின்றன. இங்கு அடுத்து சில ஆட்டங்களில் விளையாட உள்ளோம். இதனால் அதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த சீசனில் ஒரு குழுவாக நாங்கள் இணைய அதிக நேரம் கிடைக்கவில்லை. இது கடந்த சீசனில் துபாயில் நடைபெற்ற தொடருக்காக முற்றிலும் எதிராக இருந்தது. அங்கு நாங்கள் ஒரு மாதத்துக்கு முன்பே பயிற்சிகளில் ஈடபட தொடங்கினோம். ஆனால் பல ஆண்டுகளாக ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது, இதனால் விரைவாக ஆட்டத்துக்குள் நுழைந்துவிடவேண்டும். சொந்த மைதானத்தில் சிறப்பான சாதனைகளை வைத்துள்ள அணிகளுக்கு இது கடினமாக இருக்கும், ஆனால் அதுதான் விளையாட்டு, நீங்கள் வெளியிடங்களுக்கு சென்று வெல்ல வேண்டும்” என்றார்.

இன்றைய ஆட்டம்ஹைதராபாத் - கொல்கத்தா

நேரம்: இரவு 7.30

இடம்: சென்னைநேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x