Published : 11 Apr 2021 03:16 AM
Last Updated : 11 Apr 2021 03:16 AM

புதுச்சேரியில் 3 மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு - 53 சிசிடிவி கேமராக்கள் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கண்காணிப்பு :

புதுச்சேரி

புதுச்சேரியில் 3 மையங்களில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்தி ரங்கள் 53 சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது என வாக்கு எண்ணிக்கை மையத்தின் கண்காணிப்பு அலுவலர் சுதாகர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

புதுச்சேரியில் உள்ள 30 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த 6-ம் தேதி நடைபெற்றது. இதில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்தி ரங்கள் புதுச்சேரியில் 3, காரைக் காலில் 1, மாஹேவில் 1, ஏனாமில் 1 ஆகிய 6 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளன.

இதில், புதுச்சேரியில் உள்ள லாஸ்பேட்டை அரசு மகளிர் தொழில்நுட்பக் கல்லூரி மையத்தில் உப்பளம், உருளையன்பேட்டை, முதலியார்பேட்டை, நெல்லித் தோப்பு, அரியாங்குப்பம், மண வெளி, ஏம்பலம், நெட்டப்பாக்கம், பாகூர் ஆகிய தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்களும், மோதிலால் நேரு அரசு தொழில் நுட்பக் கல்லூரி மையத்தில் மண்ணாடிப்பட்டு, திருபுவனை, ஊசுடு,மங்கலம், வில்லியனூர், உழவர் கரை, கதிர்காமம், இந்திரா நகர்,தட்டாஞ்சாவடி ஆகிய தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங் களும், தாகூர் அரசு கலைக்கல்லூரி மையத்தில் காமராஜ் நகர், முத்தியால்பேட்டை, ராஜ்பவன், லாஸ்பேட்டை, காலாப்பட்டு ஆகிய தொகுதிகளின் வாக்குப் பதிவு இயந்திரங்களும் வைக்கப் பட்டுள்ளன.

இங்கு 23 தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபாட் சாதனங் களும், 8 தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் கண்காணிப்பில் உரியபாதுகாப்பு அறையில் வைத்துள் ளனர்.

மூன்று வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத் துள்ள பாதுகாப்பு அறைகள் 24 மணி நேரமும் சிசிடிவி கேமராக்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு 53 சிசிடிவிகேமராக்கள் பொருத்தப்பட்டுள் ளன. அனைத்து பாதுகாப்பு அறை களும் முதல் தளத்தில் ஒரேவழியுடன் பாதுகாப்புடன் வைக்கப் பட்டுள்ளன.

இந்த மையங்களில் துப்பாக்கி ஏந்திய மாநில போலீஸார், ஐஆர்பிஎன் போலீஸார், மத்தியபாதுகாப்பு படையினர் என்று மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட் டுள்ளன. இதில் 60 போலீஸார் வரை சுழற்சி முறையில் பணியில் உள்ளனர். இந்த மையங்களில் உட்கோட்ட நிர்வாக நீதிபதி நிலையான அதிகாரிகள் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில்ஈடுபடுகின்றனர்.

இங்கு பாதுகாப்புக்காக தீயணைப்பு வாகனங்களும், மின்சாரத்துக்கான ஜெனரேட்டர் வசதியும் தயாராக வைக்கப் பட்டுள்ளன. வேட்பாளர்கள் மற்றும் அவர்களது முகவர்கள் பாதுகாப்பு அறையின் கண்காணிப்பு ஏற்பாடுகளையும், சிசிடிவி காட்சி களையும் பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x