Published : 11 Apr 2021 03:16 AM
Last Updated : 11 Apr 2021 03:16 AM

நீதிமன்றங்களில் லோக் அதாலத் 1,215 வழக்குகளுக்கு ரூ.24 கோடி நிவாரணம் :

நாடு முழுவதும் அனைத்து நீதிமன்றங்களிலும் மெகா லோக் அதாலத் (மக்கள் நீதிமன்றம்) நேற்று நடைபெற்றது. உயர் நீதிமன்றக் கிளையில் நீதிபதிகள் ஆர்.தாரணி, டி.கிருஷ்ணவள்ளி, எஸ்.ஆனந்தி, கே.முரளிசங்கர் ஆகியோர் தலைமையில் 4 அமர்வுகள் முன்பு, வாகன விபத்து வழக்குகள், காப்பீட்டு வழக்குகள் என 263 வழக்குகள் விசாரிக்கப் பட்டியலிடப்பட்டன. இதில் 55 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு பாதிக்கப்பட்டோருக்கு ரூ.5 கோடியே 11 லட்சத்து 37 ஆயிரத்து 867 நிவாரணம் வழங்கப்பட்டன.

மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. முதன்மை மாவட்ட நீதிபதி பி.வடமலை தலைமையில் 22 அமர்வில் 2,712 வழக்குகள் எடுக்கப்பட்டு அதில் 1,160 வழக்குகளில் தீர்வு காணப்பட்டன. இதில் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.18 கோடியே 87 லட்சத்து 2 ஆயிரத்து 500 நிவாரணம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட நீதிபதி எஸ்.கிருபாகரன் மதுரம், சார்பு நீதிபதி கே.இன்ப கார்த்திக், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலாளர் வி.தீபா மற்றும் மாவட்ட நீதிபதிகள், சார்பு நீதிபதிகள், நீதித்துறை நடுவர்கள், உரிமையியல் நீதிபதிகள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x