Published : 10 Apr 2021 03:12 AM
Last Updated : 10 Apr 2021 03:12 AM
புதுடெல்லி: கடந்த நிதி ஆண்டில் (2020-21) நேரடி வரி வருமானம் ரூ.9.45 லட்சம் கோடி வசூலாகியுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. கார்ப்பரேட் வரி (சிஐடி), தனி நபர் வருமான வரி, பாதுகாப்பு பரிவர்த்தனை வரி உள்ளிட்டவை அனைத்தும் நேரடி வரி வருமான பிரிவில் அடங்கும்.
கடந்த ஆண்டு கரோனா பாதிப்பு காரணமாக வரி வருமானம் குறையும் என கணிக்கப்பட்து. ஆனால் திருத்திய மதிப்பை விட 104.46 சதவீதம் கூடுதலாக வசூலாகியுள்ளது. நிதி அமைச்சகத்தின் திருத்திய மதிப்பீட்டுத் தொகை ரூ.9.05 லட்சம் கோடியாகும். கார்ப்பரேட் வரி ரூ.4.57 லட்சம் கோடியும், தனி நபர் வரி மற்றும் பாதுகாப்பு பரிவர்த்தனை வரி ரூ.4.88 லட்சம் கோடியும் வசூலாகியுள்ளது. முன்தேதியிட்ட வரியாக (அட்வான்ஸ் டாக்ஸ்) 2021 நிதி ஆண்டில் ரூ 4.95 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. இது எதிர்பார்ப்பை விட 6.7 சதவீதம் அதிகமாகும். திருப்பி அளிக்கப்பட்ட (ரீபண்ட்) தொகை ரூ.2.61 லட்சம் கோடி. 2020-ம் நிதி ஆண்டில் திருப்பி அளிக்கப்பட்ட தொகை ரூ.1.83 லட்சம் கோடி. அதைவிட தற்போது 42.1 சதவீதம் கூடுதலாக திருப்பி அளிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT