Published : 10 Apr 2021 03:13 am

Updated : 10 Apr 2021 03:13 am

 

Published : 10 Apr 2021 03:13 AM
Last Updated : 10 Apr 2021 03:13 AM

கரோனா கட்டுப்பாடுகளை மீறினால் நடவடிக்கை - காவல் துறையினர் கண்காணிப்பு இன்று முதல் தீவிரம் :

கோவை

தமிழகத்தில் கரோனா பரவலைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. திருவிழாக் கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை, வழிபாட்டுத் தலங்கள் இரவு 8 மணி வரை மட்டுமே திறக்க அனுமதி, வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களில் ஓட்டுநர் தவிர்த்து 3 பயணிகள், ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து 2 பயணிகளுக்கு மட்டும் அனுமதி, திரையரங்குகளில் 50 சதவீதம் இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி, கேளிக்கை விடுதிகள், பூங்காக்கள் உள்ளிட்ட பொழுது போக்கு மையங்களில் 50 சதவீதம் பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி, பேருந்துகளில் நின்று கொண்டு செல்லும் பயணிகளுக்கு அனுமதியில்லை என்பது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகள் இன்று (ஏப். 10) முதல் அமலுக்கு வருகின்றன.

புதிய கட்டுப்பாடுகள் முறை யாக கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்ய உள்ளாட்சித் துறையினர், சுகாதாரத் துறையினர், காவல் துறையினர் இணைந்து இன்று முதல் கண்காணிப்பை தீவிரப்படுத்துகின்றனர்.


மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் முத்தரசு கூறும்போது, ‘‘அரசின் கட்டுப் பாடுகளை மீறி வாகனங்களில் கூடுதல் எண்ணிக்கையில் பயணிப்பவர்கள், நோய் தடுப்பு விதிகளை மீறுபவர்கள் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் கூறும்போது, ‘‘புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளதால், அது முறையாக கடைபிடிக்கப்படு கிறதா என்பது குறித்தும் கண்காணிக்கப்படும். கட்டுப் பாடுகளை மீறுபவர்கள் மீது தொற்று நோய் பரவல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிதல், அபராதம் விதித்தல் போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ என்றார்.



Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x