Published : 10 Apr 2021 03:13 AM
Last Updated : 10 Apr 2021 03:13 AM

முதுமலை புலிகள் காப்பக முகாமில் : வளர்ப்பு யானைகளுக்கு எடை பரிசோதனை :

முதுமலை: முதுமலை புலிகள் காப்பக முகாமில் பராமரிக்கப்படும் வளர்ப்பு யானைகளுக்கு உடல் எடை பரிசோதனை நடத்தப்பட்டது.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் 27 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவை சுற்றுலாப் பயணிகள் சவாரி செய்வதற்காக பயன்படுத்தப்படுகின்றன. வளர்ப்பு யானைகளின் ஆரோக்கியத்தை கண்காணிக்க மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அதன் எடை சரிபார்க்கப்படுகிறது.

முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பாம்பேக்ஸ் மற்றும் தெப்பக்காடு யானைகள் முகாமில் பராமரிக்கப்படும் 18 யானைகள், கார்குடி வனச்சரக அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள எடை மேடைக்கு வரவழைக்கப்பட்டு எடை சரிபார்க்கப்பட்டது. வழக்கமான எடையில் இருந்து 100-ல் இருந்து 200 கிலோ வரை பெரும்பாலான யானைகளின் எடை அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த எடை பரிசோதனையின் அடிப்படையில் யானைகளின் உடல் தகுதிக்கேற்ப உணவு, நடைபயிற்சி மற்றும் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படவுள்ளது என வனத் துறையினர் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x