Published : 09 Apr 2021 03:13 AM
Last Updated : 09 Apr 2021 03:13 AM

மீனவர்களுக்கு வழங்கப்பட்ட சாட்டிலைட் போன் - சேவைக் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தல் :

விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் செல்லும் போது ஏற்படும் இயற்கை சீற்றங்கள், வானிலையில் மாற்றம் நிகழ்ந்து பாதிக்கப்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்க வயர்லெஸ் ரேடியோ பயன்பாட்டில் உள்ளது. இவற்றால் 10 முதல் 20 கி.மீ. தொலைவில் மட்டுமே தொடர்பு கொள்ள முடியும்.

இதற்குத் தீர்வு காணும் வகையில் மத்திய, மாநில அரசுகளின் மானியத்து டன் தமிழகம் முழுவதும் ஆழ்கடல் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு மட்டும் இதுவரை 300 சாட்டிலைட் போன்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த போனின் விலை ரூ.1 லட்சம். இவற்றில் 75 சதவீதத்தை அரசுகள் மானியமாக வழங்குகின்றன. மீனவர்கள் 25 சதவீதம் வழங்க வேண்டும். இந்நிலையில மீனவர் ஒருங்கிணைப்புச் சங்கப் பொது செயலாளர் ஆன்றோ லெனின் கூறும்போது, சாட்டிலைட் போன்களுக்கு மாதாந்திர ரீ-சார்ஜ் ரூ.1,181 ஆக இருந்தது. இதை ரூ. 3,245 ஆக பிஎஸ்என்எல் நிறுவனம் உயர்த்தி உள்ளது. பழைய நடைமுறை நீடிக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x