Published : 09 Apr 2021 03:13 AM
Last Updated : 09 Apr 2021 03:13 AM

ராமநாதபுரம் வனச்சரக அலுவலருக்கு சர்வதேச வனச்சரகர் விருது :

மன்னார் வளைகுடா தேசிய பூங்கா கடல் பகுதியில் அரிய கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாக்க எடுத்த முயற்சிக் காக ராமநாதபுரம் வனச்சரக அலுவலருக்கு சர்வதேச வனச் சரகர் விருது வழங்கப்பட் டுள்ளது.

உலகம் முழுவதும் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாகப் பணியாற்றிய பத்து வனச்சரக அலுவலர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு சர்வதேச வனச்சரகர் விருது வழங்கப்படுகிறது. இந்த விருது சுவிட்சர்லாந்தைத் தலைமையிடமாகக் கொண்ட பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம், பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கான உலக ஆணையம், சர்வதேச ரேஞ்சர்ஸ் கூட்டமைப்பு, உலக வன உயிரின பாதுகாப்பு மையம் மற்றும் பாதுகாப்பு கூட்டமைப்பு ஆகிய அமைப்புகளால் ஒன்றிணைந்து வழங்கப்படுகிறது. நூறு நாடுகளில் இருந்து 600-க்கும் மேற்பட்ட வனச்சரக அலுவலர்கள் இந்த விருதுக்கு விண்ணப்பித்திருந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா தேசியப் பூங்கா பகுதியில் கடல் அட்டை கடத்தலுக்கு எதிராக ஏராளமான வழக்குகள் பதிவு செய்ததற்காகவும், அரிய வகை கடல் வாழ் உயிரினங்களைப் பாது காக்க எடுக்கப்பட்ட முயற்சிகளுக்காகவும், பாக் ஜலசந்தி பகுதியில் உள்ள அலையாத்தி காடுகளில் சிறப்பாகப் பணிபுரிந்ததற் காகவும் ராமநாதபுரம் வனச் சரக அலுவலர் சு.சதீஷ் இவ்விருதுக்கு விண்ணப்பித்தார்.

இவரை டேராடூனில் உள்ள இந்திய வன உயிரின நிறுவனத்தின் மூத்த அறிவியல் அறிஞர் சிவக்குமார் விருதுக்கு முன்மொழிந்திருந்தார். கரோனா தொற்று காரணமாக சுவிட்சர்லாந்தில் நடக்க இருந்த விருது வழங்கும் விழா ஏப்.7-ம் தேதி இணைய வழியில் நடைபெற்றது. அதில் ராமநா தபுரம் வனச்சரக அலுவலர் சதீஷ்க்கு சர்வதேச வனச் சரகர் விருது வழங்கப்பட்டது.

இவ்விருதில் இவருக்கு சீருடையில் அணிந்து கொள்ள பிரத்யேகமான பேட்ஜ், பரிசுத் தொகையாக 10,000 அமெரிக்க டாலர் (ரூ.7.25 லட்சம்) வனத் துறையின் மேம்பாட்டுப் பணிகளுக்காக வழங்கப்பட்டது.

அதேபோல் இவ்விருது உத்தராகண்டில் உள்ள ராஜாஜி புலிகள் காப்பகத்தின் வனச்சரகர் மகேந்திர கிரிக்கும் கிடைத் துள்ளது. இதன் மூலம் இந்தியாவைச் சேர்ந்த 2 வனச்சரக அலுவலர்கள் இவ்விருதைப் பெற்றுள்ளனர்.

இவர்களோடு மேலும் கம்போடியா, மியான்மர், ரஷ்யா, ஜார்ஜியா, ஜாம்பியா, மடகாஸ்கர், கொலம்பியா, காட்டி தி ஐவோரி ஆகிய நாடுகளில் இருந்து 8 வனச்சரக அலுவலர்களும் இவ்விருதைப் பெற்றுள்ளனர்.

விருது பெற்ற ராமநாதபுரம் வனச்சரக அலுவலர் சதீஷ் கூறும்போது, இந்த விருதை இந்தியாவில் உள்ள அனைத்து வனச்சரக அலுவலர்களுக்கும், மன்னார் வளைகுடாவில் பணி செய்ய வாய்ப்பு வழங்கிய தமிழக வனத் துறைக்கும் அர்ப்பணிப்பதாக வனச்சரக அலுவலர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x