Published : 09 Apr 2021 03:13 AM
Last Updated : 09 Apr 2021 03:13 AM

ஓசூரில் சுட்டெரிக்கும் வெயிலால் நுங்கு விற்பனை களை கட்டியது :

ஓசூர் உதவி ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை ஓரம் நுங்கு விற்பனையில் ஈடுபட்டுள்ள வியாபாரிகள். படம்: ஜோதி ரவிசுகுமார்.

ஓசூர்

கோடைகாலத்தின் ஆரம்பத்தி லேயே மக்களை சுட்டெரிக்கும் வெயில் வாட்டி வதைக்க தொடங்கி உள்ளதால் ஓசூர் நகரில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வெயிலுக்கு இதமான நுங்கு விற்பனை களைகட்டி உள்ளது.

கோடைகாலம் தொடங்கி விட்டாலே மக்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்காக உடலுக்கு இதமான குளிர்ச்சி தரும் கனிகளான தர்ப்பூசணி, நுங்கு, இளநீர், மற்றும் வெள்ளரிக்காய், மோர் போன்றவற்றை நாடத் தொடங்குவது வழக்கம்.

அதன்படி ஓசூர் நகரின் பிரதான வீதிகளில் தர்பூசணி, இளநீர், நுங்கு போன்றவை மலை போல குவிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் மக்களின் முதல் தேர்வாக நுங்கு உள்ளது. ஒரு நுங்கு ரூ.10 என விலை அதிகரித்துள்ள நிலையிலும் விற்பனை களை கட்டியுள்ளது.

இதுகுறித்து ஓசூர் – தேன்கனிக்கோட்டை சாலையில் உதவி ஆட்சியர் அலுவலகம் முன்பு நுங்கு வியாபாரம் செய்யும் காவேரிப்பட்டணம் சங்கர் கூறுகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காவேரிப்பட்டணம், பர்கூர், வேப்பனப்பள்ளி, ஊத்தங்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பனைமரம் அதிகளவில் உள்ளன. இங்கு உற்பத்தி செய்யப்படும் பனை நுங்குகளை ஓசூர் மட்டுமன்றி கர்நாடக மாநிலம் பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட நகரங்களுக்கும் விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். கடந்த ஆண்டு 3 நுங்குகள் ரூ. 20-க்கு விற்பனை ஆனது. ஆனால் இந்த ஆண்டு விளைச்சல் குறைவு காரணமாக 1 நுங்கு ரூ.10-க்கு விற்பனை ஆகிறது. தற்போது சுட்டெரிக்கும் கோடை வெயில் காரணமாக வாடிக்கையாளர்கள் கூட்டமும் அதிகரித்துள்ளதால் நுங்கு விலை கூடியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x