Published : 09 Apr 2021 03:13 AM
Last Updated : 09 Apr 2021 03:13 AM

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் - ஒரே நாளில் ரூ.7.25 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை :

வேலூர்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட் டத்தில் மூன்று நாட்களுக்குப் பிறகு டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்பட்டதில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.7.25 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன.

தமிழகம் முழுவதும் சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு கடந்த 4-ம் தேதி தொடங்கி 6-ம் தேதி வரை மதுபான கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதன்படி, வேலூர், திருப் பத்தூர், ராணிப்பேட்டை உள் ளிட்ட 3 மாவட்டங்களில் 3 நாட் களுக்கு மதுபான கடைகளுடன் மதுக்கூடங்களும் மூடப்பட்டி ருந்தன.

கடந்த 3-ம் தேதி மட்டும் ஒரே நாளில் ரூ.9 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை ஆகியிருந்தன. மூன்று நாட்கள் விடுமுறைக்கு பிறகு டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.

வேலூர், திருப்பத்தூர் மாவட் டங்களில் உள்ள 116 டாஸ்மாக் மதுபானக் கடைகளில் நேற்று முன்தினம் ஒரேநாளில் ரூ.4 கோடியே 75 லட்சமும், ராணிப் பேட்டை மாவட்டத்தில் உள்ள 88 டாஸ்மாக் கடைகளில் ஒரே நாளில் ரூ.2 கோடியே 50 லட்சத்துக்கும் மதுபானங்கள் விற்பனையாகின.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ரூ.7.25 கோடிக்கு மதுபானங்கள் விற் பனையாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x