Published : 08 Apr 2021 03:12 AM
Last Updated : 08 Apr 2021 03:12 AM

கட்டணம் செலுத்தினாலே தேர்ச்சி என்று கூறி கல்லூரி மாணவர்களின் - அரியர் தேர்வை ரத்து செய்ததை ஏற்க முடியாது : தேர்வு நடத்துவது குறித்து பரிசீலிக்க உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை

கரோனா பரவலை காரணம் காட்டி, அரியர் தேர்வுகளை அரசு ரத்து செய்ததை ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம், தேர்வு நடத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு கரோனா பரவல் அதிகரித்ததால், கல்லூரி இறுதி பருவத் தேர்வு தவிர்த்து மற்ற அனைத்து தேர்வுகளை ரத்து செய்தும், அதேபோல அரியர் தேர்வுகளை ரத்து செய்தும் தமிழக அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் அரசாணை பிறப்பித்தது. அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்திய அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அதில் அறிவிக்கப் பட்டது.

இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, வழக்கறிஞர் பி.ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இந்த வழக்குகள் நேற்று விசாரணைக்கு வந்தன.

அப்போது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, ‘‘தமிழக அரசின் இந்த அரசாணைக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம், சட்டம், விவசாயம், மருத்துவம், ஆசிரியர் படிப்புகளை நிர்வகிக்கும் அமைப்புகள் ஆகியவை எதிர்ப்பு தெரிவித்தன. இதனால், அவற்றில் அரியர் படிப்புகளுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. பல்கலைக்கழக மானி யக் குழு (யுஜிசி) விதிகளின் அடிப்படை யிலேயே கலை, அறிவியல் கல்லூரிகளில் அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன’’ என்று தெரிவித்தார்.

இதற்கு யுஜிசி தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. ‘‘கரோனா காரணமாக எளிய முறையில் தேர்வுகளை நடத்த வேண்டும் என்று கடந்த ஆண்டு ஏப்ரல், ஜூலை மாதங்களில் அறிவுறுத்தல்கள் வழங்கப் பட்டன. தேர்வுகளை நடத்த வேண்டாம் என்று அதில் தெரிவிக்கவில்லை’’ என்று சுட்டிக்காட்டப்பட்டது.

இதையடுத்து, நீதிபதிகள் கூறியதாவது:

தேர்வுக்கு கட்டணம் செலுத்தியிருந் தாலே தேர்ச்சி என்று கூறி அரியர் தேர்வுகளை ரத்து செய்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ஏற்க முடியாது. தேர்வு நடைமுறையை மேற்கொள்வது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் பல்கலைக்கழகங் கள், கல்லூரிகள் வாரியாக எத்தனை மாண வர்கள் அரியர் தேர்வுக்கு விண்ணப்பித்தனர், அதில் எத்தனை மாணவர்கள் தேர்ச்சி அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து முழுமையான விவரங் களை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும்.

கல்வியின் புனிதத்தில் சமரசம் செய்துகொள்ளாமல் அரியர் பாடங்களுக்கு ஏதே னும் தேர்வு நடைமுறைகளை மேற் கொள்வது குறித்து தமிழக அரசும், பல்கலைக்கழக மானியக் குழுவும் கலந்து பேசி ஆலோசனை வழங்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஏப்ரல் 15-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x