Published : 08 Apr 2021 03:12 AM
Last Updated : 08 Apr 2021 03:12 AM

தமிழகத்தில் 72.78 சதவீத வாக்குப்பதிவு : 2016 பேரவை தேர்தலைவிட 1.48 சதவீதம் குறைவு

சென்னை

நடந்து முடிந்துள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 72.78 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இது2016 சட்டப்பேரவை தேர்தலைவிட 1.48 சதவீதம் குறைவாகும். அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் 83.92 சதவீதம், குறைந்தபட்சமாக சென்னை மாவட்டத்தில் 59.06சதவீத வாக்குகள் பதிவாகின.

தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த 6-ம் தேதி ஒரே கட்டமாக நடந்தது. இதில் 3,998 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 6 கோடியே 28 லட்சத்து 69 ஆயிரத்து 955 வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக, 88,937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. கரோனா தடுப்புநடவடிக்கையாக வழக்கத்தைவிட30 சதவீதம் அதிகமாக வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 6-ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 300 கம்பெனிகளை சேர்ந்த 23,200 துணை ராணுவப் படையினர் உட்பட 1 லட்சத்து 58 ஆயிரத்து 263 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

46,203 வாக்குச்சாவடிகளில் வெப் காஸ்டிங் முறையில் சிசிடிவிகேமராக்களை நிறுவி கண்காணிக்கப்பட்டது. வாக்குச்சாவடி பணியில் 4 லட்சத்து 91 ஆயிரத்து 27 அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

பெரிய அளவில் அசம்பாவிதங்கள் ஏதுமின்றி வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. மொத்தம் 72.78 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் 83.92 சதவீதம், குறைந்தபட்சமாக சென்னை மாவட்டத்தில் 59.06 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

தொகுதிகள் அளவில், அதிகபட்சமாக பாலக்கோடு தொகுதியில் 87.33 சதவீதம், குறைந்தபட்சமாக சென்னை வில்லிவாக்கத்தில் 55.52 சதவீதம் பதிவாகியுள்ளது.

2016 சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் 74.26 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. அதைவிட இத்தேர்தலில் வாக்குப்பதிவு 1.48 சதவீதம் குறைந்துள்ளது.

2021 பேரவை தேர்தல் வாக்குப்பதிவுமாவட்டம்பதிவான வாக்குகள் (%)கரூர்83.92 அரியலூர்82.47 தருமபுரி82.35 கள்ளக்குறிச்சி80.14 நாமக்கல்79.72 சேலம்79.22பெரம்பலூர்79.09 திருவண்ணாமலை78.62 விழுப்புரம்78.56 ராணிப்பேட்டை77.92 திருப்பத்தூர்77.33 கிருஷ்ணகிரி77.30 திண்டுக்கல்77.13 ஈரோடு77.07 திருவாரூர்76.53 கடலூர்76.50 புதுக்கோட்டை76.41 நாகப்பட்டினம்75.48 தஞ்சாவூர்74.13 திருச்சி73.79 விருதுநகர்73.77 வேலூர்73.73 தென்காசி72.63 காஞ்சிபுரம்71.98 தேனி71.75 திருவள்ளூர்70.56 மதுரை70.33 தூத்துக்குடி70.20 திருப்பூர்70.12 நீலகிரி69.68 ராமநாதபுரம்69.60 சிவகங்கை68.94 கோவை68.70 கன்னியாகுமரி68.67 செங்கல்பட்டு68.18 திருநெல்வேலி66.65 சென்னை59.07மொத்தம்72.78

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x