Published : 08 Apr 2021 03:12 am

Updated : 08 Apr 2021 03:12 am

 

Published : 08 Apr 2021 03:12 AM
Last Updated : 08 Apr 2021 03:12 AM

செல்வபுரம் வாக்குச்சாவடி முன்பு மோதல் தொடர்பாக - திமுக, அதிமுகவை சேர்ந்த 200 பேர் மீது வழக்கு :

கோவை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி, தனது ஆதரவாளர்களுடன், அத்தொகுதிக்குட்பட்ட செல்வபுரம் மாநகராட்சி ஆரம்பப்பள்ளி வாக்குச்சாவடியில் நேற்று முன்தினம் நடந்த வாக்குப்பதிவை பார்வையிட வந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் கோஷம் போட்டனர். வேட்பாளரையும் தாக்க முயன்றனர்.

இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. அங்கு வந்த செல்வபுரம் போலீஸார், திமுக வேட்பாளரை மீட்டு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பான புகாரின் பேரில், திமுக மற்றும் அதிமுகவைச் சேர்ந்த 200 பேர் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், சட்ட விரோதமாக ஒன்று கூடுதல், தொற்று நோய் தடுப்புச் சட்டம், கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் செல்வபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.



Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x