Published : 08 Apr 2021 03:12 AM
Last Updated : 08 Apr 2021 03:12 AM

உதகை புனித ஸ்டீபன் ஆலயத்தின் 190-வது ஆண்டு விழா :

உதகை: நீலகிரி மாவட்டத்தை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்தபோது, கடந்த 1831-ம் ஆண்டு உதகையில் சி.எஸ்.ஐ. புனித ஸ்டீபன் ஆலயம் திறக்கப்பட்டது. ஆலய ஜன்னல் கதவுகளின் கண்ணாடியில் இயேசு கிறிஸ்துவின் சிலுவைக் காட்சி, இயேசு கிறிஸ்து குழந்தையாக இருந்தபோது அவரை பெற்றோர் கையில் வைத்திருக்கும் காட்சி போன்றவை ஓவியங்களாக இடம்பெற்றுள்ளன. கட்டிட வடிவமைப்பு பிரமிக்க வைப்பதால், வெளிமாநிலங்கள் மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளும் அவற்றை ரசித்துச் செல்கின்றனர். இங்கிலாந்து நாட்டில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் தங்களது முன்னோரை அடக்கம் செய்த கல்லறைக்குச் சென்று அஞ்சலி செலுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.இந்நிலையில் உதகை சி.எஸ்.ஐ. புனித ஸ்டீபன் ஆலயம் திறக்கப்பட்டு, 190 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூரும் வகையில் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி நடந்த சிறப்பு பிரார்த்தனையில் பங்குத் தந்தை அருண் திலகம் நற்செய்தி வழங்கினார். இதில் கிறிஸ்தவ பாடல்கள் இசைப்பது, சிறுவர்களின் கலை நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x