Published : 08 Apr 2021 03:13 AM
Last Updated : 08 Apr 2021 03:13 AM

கோவை மாவட்டத்தில் பெண்களை விட - ஆண் வாக்காளர்கள் அதிகம் பேர் வாக்களிப்பு :

கோவை மாவட்டத்தில் 15,19,027 ஆண்கள், 15,62,573 பெண்கள், 428 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 30 லட்சத்து 82 ஆயிரத்து 28 வாக்காளர்கள் உள்ளனர். சட்டப்பேரவைத் தேர்தலுக்காக நேற்று முன்தினம் நடந்த வாக்குப்பதிவில் மாவட்டத்தில் மொத்தம் 68.32 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. இதில், பெண் வாக்காளர்களை விட, ஆண் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களித்து உள்ளனர்.

மேட்டுப்பாளையம் தொகுதியில் 76.47 சதவீதம் ஆண்கள், 73.94 சதவீதம் பெண்கள் வாக்களித்துள்ளனர். சூலூர் தொகுதியில் 76.58 சதவீதம் ஆண்கள், 74.46 சதவீதம் பெண்கள், கவுண்டம்பாளையம் தொகுதியில் 66.51 சதவீதம் ஆண்கள், 65.73 சதவீதம் பெண்கள், கோவை வடக்கு தொகுதியில் 59.54 சதவீதம் ஆண்கள், 58.63 சதவீதம் பெண்கள், தொண்டாமுத்தூர் தொகுதியில் 71.27 சதவீதம் ஆண்கள், 70.82 சதவீதம் பெண்கள் வாக்களித்துள்ளனர்.

சிங்காநல்லூர் தொகுதியில் 62.38 சதவீதம் ஆண்கள், 60.99 சதவீதம் பெண்கள், கிணத்துக்கடவு தொகுதியில் 70.92 சதவீதம் ஆண்கள், 69.71 சதவீதம் பெண்கள், பொள்ளாச்சி தொகுதியில் 79.77 சதவீதம் ஆண்கள், 75.01 பெண்கள், வால்பாறை தொகுதியில் 71.88 சதவீதம் ஆண்கள், 68.46 சதவீதம் பெண்கள் வாக்களித்துள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் 69.12 சதவீதம் ஆண் வாக்காளர்களும், 67.56 சதவீதம் பெண் வாக்காளர்களும், 24.07 சதவீதம் மூன்றாம் பாலினத்தவரும் வாக்களித்துள்ளனர்.

இது தொடர்பாக அரசியல் பார்வையாளர்கள் கூறும்போது,‘‘நல்ல ஆட்சியாளர்களை தேர்வு செய்ய அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும். ஆனால், நடப்புத் தேர்தலில் கோவையில் பெண் வாக்காளர்களின் வாக்கு சதவீதம், ஆண்களை விட சற்று குறைந்துள்ளது. மொத்தமுள்ள வாக்காளர்களை ஒப்பிடும்போது, 21.05 லட்சம் வாக்காளர்கள் தான் வாக்களித்துள்ளனர். ஏறக்குறைய 9 லட்சம் பேர் வாக்களிக்கவில்லை. வாக்குப்பதிவு சதவீதம் குறைந்ததற்கு கரோனா அச்சம், வயது முதிர்வு, உடல் நலக்குறைவு, வெளியூரில் இருத்தல் போன்ற காரணங்கள் கூறப்படுகின்றன. வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையமும், மாவட்ட நிர்வாகமும் தீவிரப்படுத்த வேண்டும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x