Published : 08 Apr 2021 03:13 AM
Last Updated : 08 Apr 2021 03:13 AM

கணினி அறிவியல் பாடத்திட்டம் வடிவமைக்க - நிபுணர் குழு அமைக்க எஸ்சிஇஆர்டி முடிவு :

தமிழக பள்ளிக்கல்வியில் 11, 12-ம் வகுப்புகளுக்கு மட்டுமே தற்போது கணினி அறிவியல் தொடர்பான பாடங்கள் கற்றுதரப்படுகின்றன. இதர வகுப்புகளுக்கு கணினி பயிற்சி தொடர்பான எவ்வித வழிகாட்டுதலும் இல்லாததால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து 6 முதல் 10-ம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை பயிற்றுவிக்க கல்வித் துறை முடிவு செய்தது. இதற்கான அறிவிப்பை கடந்த நிதி நிலை அறிக்கையில் தமிழக அரசு வெளியிட்டது. அதன்பின்னர் சட்டப்பேரவைத் தேர்தல் காரணமாக தாமதம் ஏற்பட்டுவந்த திட்டப்பணிகள் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘வரும் கல்வியாண்டில் (2021-22) இருந்து 6 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கணினி அறிவியல் பாடம் கற்றுதரப்பட உள்ளது. அதற்கான பாடத்திட்டம் தயாரிப்பு உள்ளிட்ட முன்னேற்பாடுகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி பாடத்திட்டத்தை வடிவமைக்க மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆர்டி) தலைமையில் பேராசிரியர்கள், கணினி ஆசிரியர்கள் கொண்ட குழு அமைக்கப்படவுள்ளது.

இணையதள முறைகேடுகள் மற்றும் குற்றங்களில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான விழிப்புணர்வு வழிமுறைகளும் பாடங்களில் இடம்பெறும். மே மாத இறுதிக்குள் இந்த பணிகள் முடிக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x