Published : 08 Apr 2021 03:13 AM
Last Updated : 08 Apr 2021 03:13 AM

கடந்த தேர்தலை விட - புதுவையில் 2.41 சதவீதம் வாக்குகள் குறைவாக பதிவு : வாக்குப்பதிவில் ஏனாம் தொகுதி முதலிடம்

புதுச்சேரியில் கடந்த தேர்தலை விட 2.41 சதவீதம் வாக்குகள் குறைந்துள்ளது. 30 தொகுதிகளில் வாக்குப்பதிவில் ஏனாம் தொகுதி முதலிடத்திலும் இறுதி இடத்தில் ராஜ்பவனும் உள்ளது.

புதுவையில் கடந்த 2016-ம்ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 84.11 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன.

தற்போதைய 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் 81.70 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதால், கடந்த தேர்தலை விட 2.41 சதவீதம் வாக்குகள் குறைந்தளவில் பதிவாகியுள்ளன.

இறுதி இடத்தில் ராஜ்பவன்

இதில், அதிகளவாக ஏனாம் தொகுதியில் 91.28 சதவீதமும், அதே போல், குறைந்தளவாக ராஜ்பவன் தொகுதியில் 72.68 சதவீதமும் வாக்குகளும் பதிவாகி யுள்ளன.

மண்ணாடிப்பட்டு- 87.78, திருபுவனை- 86.55, ஊசுடு- 88.46, மங்கலம்- 86.28, வில்லியனூர்- 81.45, உழவர்கரை - 76.14, கதிர்காமம் - 76.32, இந்திரா நகர்- 79.99, தட்டாஞ்சாவடி -75.09, காமராஜர் நகர்- 76.78, லாஸ்பேட்டை - 78.99, காலாப்பட்டு- 84.47, முத்தியால்பேட்டை - 77.09, ராஜ்பவன் - 72.68, உப்பளம் - 83.70, உருளையன்பேட்டை - 80.54, நெல்லித்தோப்பு - 81.33, முதலியார்பேட்டை - 81.14, அரியாங்குப்பம் - 82.45, மணவெளி - 85.16, ஏம்பலம் - 87.37, நெட்டப்பாக்கம் - 85.77, பாகூர் - 87.90, நெடுங்காடு - 82.94, திருநள்ளாறு - 83.89, காரைக்கால் வடக்கு - 77.40, காரைக்கால் தெற்கு - 75.09, நிரவி திருப்பட்டினம் - 81.50, மாஹே - 73.54, ஏனாம் - 91.28. மொத்தம் - 81.70 சதவீதம்.

மாற்றம் செய்யப்பட்ட இயந்திரங்கள்

தேர்தலின்போது 31 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 36 கட்டுப்பாட்டுக் கருவிகள், 113 வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை சாதனங்கள் மாற்றம் செய்யப்பட்டன. இறுதிவிவரங்களை தேர்தல்துறை யானது நேற்று செய்திக்குறிப்பாக வெளியிட்டிருந்தது.

மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர் சந்திப்பை நடத்தவில்லை என்பது குறிப் பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x