Published : 08 Apr 2021 03:13 AM
Last Updated : 08 Apr 2021 03:13 AM

சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யாததால் - வெளியூர்களுக்கு திரும்ப முடியாமல் மக்கள் தவிப்பு :

வேலை நிமித்தமாக வெளியூர் களில் வசித்த வாக்காளர்களுக்கு சிறப்பு பஸ் வசதி செய்து சொந்த ஊர்களில் வாக்களிக்க ஏற்பாடு செய்த அரசு, மீண்டும் அவர்கள் ஊர்களுக்குத் திரும்ப பஸ் வசதி ஏற்பாடு செய்யவில்லை.

தமிழகத்தில் நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் வெளியூர்களில் வசிக்கும் வாக்காளர்கள், சொந்த ஊர்களில் வாக்களிக்க வசதியாக சிறப்பு பேருந்து வசதி செய்யப்பட்டது.

சென்னையில் இருந்து வழக் கமாக இயக்கப்படும் 2,300 பேருந்துகளுடன் 3,090 சிறப்பு பேருந்துகள் தேர்தல் நடைபெற்ற வாரம் முழுவதும் இயக்கப்பட்டன.

அதனால், சென்னை மட்டுமல் லாது தமிழகம் முழுவதும் இந்த பஸ்கள் சென்று வந்த நகரங்களில் வசித்த வெளியூர்வாசிகள், தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பி தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர். வழக்கமாக வெளியூர்களில் வசிப்பவர்கள், தேர்தல் நாளில் தங்களுடைய ஒரு வாக்கைச் செலுத்த பணம் செலவிட்டு சொந்த ஊர்களுக்குத் திரும்ப ஆர்வம் காட்ட மாட்டார்கள். ஆனால், இந்தமுறை ஏராளமான வெளியூர்வாசிகள் வழக்கத்துக்கு மாறாக ஆர்வத்துடன் சொந்த ஊர்களுக்கு வந்து வாக்களித்தனர்.

குறிப்பாக சென்னை, கோவை, திருப்பூர், ஓசூர், சேலம் உள்ளிட்ட நகரங்களில் வசித்த தென் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் வாக்காளர்கள் சொந்த ஊர்களுக்கு வந்து வாக்களித்தனர்.

அதனால், தென் மாவட்டங்க ளுக்கு வந்த சிறப்பு பஸ்களில் கடந்த ஒரு வாரமாகக் கூட்டம் அலைமோதியது.

இந்நிலையில் நேற்று முன்தினம் தேர்தல் முடிந்த நிலையில், வெளியூர்களில் இருந்து வந்த வர்கள் மீண்டும் தாங்கள் பணிபுரியும் நகரங்களுக்குத் திரும்ப சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்படவில்லை.

அதனால், அவர்கள் பஸ்கள் கிடைக்காமல் தவித்தனர். பலர் ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் செலுத்தி பணிபுரியும் நகரங்களுக்குச் சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x