Published : 08 Apr 2021 03:13 AM
Last Updated : 08 Apr 2021 03:13 AM

மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக மாற்றக்கோரி வழக்கு : கொள்கை முடிவில் தலையிட உயர் நீதிமன்றம் மறுப்பு

மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக மாற்றக்கோரிய வழக்கில், மத்திய அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித் துள்ளது.

தமிழ்நாடு சுற்றுலா முகவர்கள் சங்கத் தலைவர் சதீஷ்குமார், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

மதுரை விமான நிலையம் 17,500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு இரண்டு முனையங்கள் உள்ளன. மதுரை யிலிருந்து சிங்கப்பூர், இலங்கை, துபாய் உட்பட பல்வேறு வெளி நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன.

பல்வேறு வெளிநாட்டு விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் தங்கள் நாடுகளிலிருந்து மது ரைக்கு விமானம் இயக்கத் தயாராக உள்ளன. அதற்கு அனுமதி கோரி, மத்திய அரசி டம் விண்ணப்பித்துள்ளன. சென்னைக்கு அடுத்து தமிழகத்தில் இரண்டாவது பெரிய விமான நிலையமாகவும் மதுரை விமான நிலையம் உள்ளது. அதிக பயணிகள் வந்து செல்லும் விமான நிலையங்கள் பட்டியலில் மதுரை 36-வது இடத்தில் உள்ளது. ஐஎஸ்ஓ தரச்சான்றும் பெற்றுள்ளது.

மதுரையைவிட சிறிய விமான நிலையங்களான உத்தரப் பிரதேசம் குஷிநகர், திருப்பதி விமான நிலையங்கள் பன்னாட்டு விமான நிலையங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. எனவே மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக அறிவித்து மேம்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர் வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள், விமான நிலையங்களை பன்னாட்டு விமான நிலையம் என அறிவிப்பது மத்திய அரசின் கொள்கை முடிவு சார்ந்தது. அதில் தலையிட முடியாது. இந்தக் கோரிக்கையை மத்திய அரசிடம் மக்கள் பிரதிநிதிகள் மூலம் வலியுறுத்தலாம். மனு தொடர்பாக மத்திய விமான போக்குவரத்துத்துறை பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஏப்.26-க்கு நீதிப திகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x