Published : 08 Apr 2021 03:14 AM
Last Updated : 08 Apr 2021 03:14 AM

மும்முனை மின்சாரம் வழங்காததை கண்டித்து - தானிப்பாடியில் விவசாயிகள் போராட்டம் :

தானிப்பாடி துணை மின் நிலையம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

திருவண்ணாமலை

தண்டராம்பட்டு சுற்றியுள்ள கிராமங்களில் மும்முனை மின்சாரம் வழங்காததைக் கண்டித்து, தானிப்பாடி துணை மின் நிலை யத்தின் முன்பாக விவசாயிகள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் தண் டராம்பட்டு அடுத்த தானிப்பாடி கிராமத்தில் உள்ள துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட போந்தை, நாராயணங்குப்பம், தானிப்பாடி, ரெட்டியார் பாளையம், மேல்பாச்சார், கீழ்பாச்சார், தண்டா, கொலமஞ்சனூர், சின்னியம்பேட்டை, ஆத்திப்பாடி, புளியம்பட்டி உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் கடந்த மார்ச் மாதம் 28-ம் தேதியில் இருந்து விவசாயத்துக்கு பயன்படுத்த கூடிய மும்முனை மின்சாரம் முறையாக வழங்கவில்லை என கூறப்படுகிறது.

இது தொடர்பாக மின்வாரிய அலுவலகத்தில் பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் துணை மின் நிலையத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் நெல், கரும்பு, மணிலா உள்ளிட்ட பயிர்களை காப்பாற்ற தண்ணீர் பாய்ச்ச வேண்டியுள்ளது. மும்முனை மின்சாரம் இல்லாததால் முறையாக தண்ணீரை பாய்ச்ச முடியாமல் பயிர்கள் கருகுவதாக விவ சாயிகள் குற்றஞ்சாட்டினர்.

மேலும், ஏப்ரல் 1-ம் தேதி முதல் மும்முனை மின்சாரம் தடையில்லாமல் வழங்கப்படும் என கூறியுள்ள நிலையில் தங்கள் பகுதியில் மட்டும் அவ்வாறு எதுவும் வழங்கவில்லை என புகார் தெரிவிக்கின்றனர். அவர்களை சமாதானம் செய்த அதிகாரிகள் துணை மின்நிலைய மின்மாற்றி பழுதடைந்துள்ளது என்றும் புதிய மின்மாற்றி வாங்கப்பட்டு அதை பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது என்றும் 70 மணி நேரத்தில் இந்தப் பணிகள் முடிக்கப்பட்டு மும்முனை மின்சாரம் தடையில்லாமல் வழங் கப்படும் என்றும் உறுதியளித்தனர்.

இதனையேற்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்ற துடன், விரைவில் பணியை முடிக்காவிட்டால் வேங்கிக்கால் மின் வாரிய மேற்பார்வையாளர் அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என எச்சரித்துச் சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x