Published : 07 Apr 2021 03:16 AM
Last Updated : 07 Apr 2021 03:16 AM

திருப்பூர் மாவட்டத்தில் வாக்களித்த வேட்பாளர்கள் :

திருப்பூர்

திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்களுக்காக ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்குகளை செலுத்தினர்.

திருப்பூர் தெற்கு தொகுதியில்மதச்சார்பற்ற முற்போக்குகூட்டணியின் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் க.செல்வராஜ், கொங்குநகர் வெங்கடாஜலபதி சாலை 1-வது ரயில்வே கேட் அருகே வெங்கடாஜலபதி மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் வாக்களித்தார்.

இதே தொகுதியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளரும் முன்னாள் மேயருமான விசாலாட்சி, பட்டுக்கோட்டையார் நகர்மாநகராட்சி நடுநிலைப்பள்ளியிலும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் அனுஷா ரவி, கேபிஎன் காலனி சமுதாயக் கூடத்திலும், தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினரும், அதிமுக வேட்பாளருமான சு.குணசேகரன், வாலிபாளையம் மாநகராட்சிப் பள்ளியிலும் வாக்களித்தனர்.

திருப்பூர் வடக்கு சட்டப்பேரவை உறுப்பினர் கே.என்.விஜயகுமார், வெங்கமேடு வி.கே அரசுப் பள்ளியில் வாக்களித்தார். திருப்பூர் வடக்கு தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம். ரவி (எ) சுப்ரமணியம், பாளையக்காடு முருகப்பசெட்டியார் பள்ளிக்கு, இருசக்கரவாகனத்தில் வந்து வாக்களித்தார். மக்கள் நீதி மய்யம்வேட்பாளர் சு.சிவபாலன், நெசவாளர் காலனி அரசு உயர்நிலைப்பள்ளியிலும், தேமுதிக வேட்பாளர் செல்வகுமார், சிறுபூலுவபட்டி அரசுப் பள்ளியிலும் வாக்களித்தனர்.

பல்லடம்

பல்லடம் தொகுதி அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம். ஆனந்தன் ஓடக்காடு தனியார் பள்ளியிலும், பல்லடம் சட்டப்பேரவை உறுப்பினர் நடராஜன், சென்னிமலைபாளையம் அரசுப் பள்ளியிலும், மதிமுக வேட்பாளர் க.முத்துரத்தினம், மாதப்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும் வாக்களித்தனர்.

தாராபுரம்

தாராபுரம் (தனி) தொகுதி திமுக வேட்பாளர் கயல்விழி செல்வராஜ், சி.எஸ்.ஐ மேல்நிலைப்பள்ளியில் வாக்களித்தார். உடுமலை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் தாராபுரம் அருகே கவுண்டச்சிபுதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், அமமுக வேட்பாளர் கலா ராணி,தாராபுரம் பஜனை மடத்தெருவில் உள்ள பள்ளியிலும் வாக்களித்தனர்.

அவிநாசி

அவிநாசி தொகுதியில் தேமுதிக வேட்பாளர் மீரா சேவூர்அரசு தொடக்கப்பள்ளியில் வாக்களித்தார். காங்கயம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்மு.பெ.சாமிநாதன், முத்தூர் ஊராட்சி நடுநிலைப் பள்ளியிலும்,திருப்பூர் ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன், தனது குடும்பத்தாருடன் பிஷப் உபகாரசாமி மேல்நிலைப்பள்ளியிலும் வாக்களித்தனர்.

உடுமலை

உடுமலை தொகுதியில்போட்டியிடும் கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், தனது குடும்பத்தினருடன் தாராபுரம் சாலை நகராட்சி தொடக்கப் பள்ளியில் வாக்களித்தார். காங்கிரஸ் வேட்பாளர் கே.தென்னரசு, அவரது சொந்த ஊரான தாராபுரம், நல்லாம்பாளையம் அரசு பள்ளியில் வாக்களித்தார்.

மடத்துக்குளம்

மடத்துக்குளம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் கிழக்கு மாவட்டச் செயலாளர் சி.மகேந்திரன், குடிமங்கலம் ஒன்றியம், மூங்கில்தொழுவு ஊராட்சியில் உள்ள அரசு பள்ளியிலும், திமுக வேட்பாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான இரா.ஜெயராமகிருஷ்ணன், மடத்துக்குளம் ஒன்றியம், துங்காவி ஊராட்சி அரசுப் பள்ளியில் வாக்களித்தார்.

உதகை

உதகை பாஜக வேட்பாளர் மு.போஜராஜன், தனது சொந்தஊரான கோத்தகிரி காந்தி மைதானத்தில் உள்ள புயல்நிவாரண முகாம் வாக்குச்சாவடியில் வாக்களித்தார். காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஆர்.கணேஷ், மஞ்சக்கொம்பை வாக்குச்சாவடியில் வாக்களித்தார். கேத்தி சிஎஸ்ஐ பள்ளி வாக்குச்சாவடியில் முன்னாள் எம்.பி.யான கே.ஆர்.அர்ஜூணன் வாக்களித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x