Published : 07 Apr 2021 03:16 AM
Last Updated : 07 Apr 2021 03:16 AM

புதுச்சேரியில் வாக்களித்த 510 கரோனா நோயாளிகள் :

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல்வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்ற வாக்குப்பதிவின்போது, கரோனாநோயாளிகள் மாலை 6 மணிமுதல் 7 மணி வரை வாக்களிக்கலாம் என மாநில தேர்தல்துறை குறிப்பிட்டிருந்தது. அதன்பேரில் புதுச்சேரியில் 220, காரைக்காலில் 247, மாஹேவில் 25, ஏனாமில் 18 என 510 கரோனா நோயாளிகள் தங்களது வாக்குகளைச் செலுத்தினர்.

கரோனா நோயாளிகள் வருவதற்கு முன்பு வாக்குப்பதிவு மையத்தில் இருந்த அதிகாரிகள் முதல் அனைவரும் முழு முகக்கவசம் அணிந்திருந்தனர். அவர்கள் வாக்களித்த பின்பு வாக்குச்சாவடி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

இதே போல் கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, திட்டக்குடி, புவனகிரி, சிதம்பரம், குறிஞ்சிப்பாடி ஆகிய 6 தொகுகளில் தலா ஒரு கரோனா வைரஸ் தொற்று உள்ளவர்கள் வாக்களித்துள்ளனர்.

தனி வேனில் வந்த இவர்கள்பாதுகாப்பு கவச உடை அணிந்திருந்தனர். இவர்களது வருகையையொட்டி வாக்குச்சாவடி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இந்த 6 பேரும் அவரவர்தொகுதிக்கு உட்பட்ட வாக்குச் சாவடி மையத்தில் வாக்களித்தனர். வாக்குச்சாவடியில் பணியில் இருந்த அலுவலர்களும் பாதுகாப்பு கவச உடை அணிந்திருந்தனர்.

இதே போல் விழுப்புரம் மாவட்டத்தில் 25 கரோனா நோயாளிகள் தங்கள் வாக்கு களைப் பதிவு செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x