Published : 07 Apr 2021 03:17 AM
Last Updated : 07 Apr 2021 03:17 AM

மதுரையில் மாலையில் வாக்குப்பதிவு அதிகரிப்பு :

மதுரை மகபூப்பாளையம் சிவகாசி நாடார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் மாலை 6 மணிக்குப் பின் கரோனா நோயாளிகள் வாக்களிக்க நேரம் ஒதுக்கப்பட்டதால் கவச உடைந்து அணிந்து பணியாற்றிய தேர்தல் பணியாளர்கள். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை

மதுரை மாவட்டத்தில் முற்பகலில் குறிப்பிட்ட 3 மணி நேரம் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்த நிலையில், பிற்பகல் 1 மணிக்கு மேல் சற்று மந்தமானது. 50 முதல் 55 சதவீதம் மட்டுமே பதிவாகும் என வேட்பாளர்கள், கட்சி நிர்வாகிகள் எதிர்பார்த்தனர். ஆனால் பிற்பகல் 2 மணிக்கு மேல் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்து 5 மணிக்கு 65 சதவீதத்தை கடந்தது.

எந்திரம் பழுது

மதுரை கிழக்குத் தொகுதிக்குட் பட்ட கருப்பாயூரணி அப்பர் உயர்நிலைப் பள்ளி ஓட்டுச்சா வடியில் 45-வது பூத்தில் சுமார் 8 மணிக்கு வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்தது. சிறிது நேரத்தில் அது சரிசெய்யப்பட்டது. இருப்பினும், இயந்திரம் பழுதுக்கு முன்பாக வாக்களித்த சாந்தி என்பவர், தனது வாக்கு பதிவாகவில்லை, மீண்டும் தனக்கு வாய்ப்பளிக்க வேண்டும், என தேர்தல் அதிகாரியிடம் வாதிட் டார். அவரது வாக்குப் பதிவாகி இருக்கிறது என்பதை அறிவு றுத்தியும் அவர் கேட்காமல் வாதம் செய்தார். ஒரு கட்டத்துக்கு மேலும் கேட்காததால் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவரை அறையைவிட்டு வெளியேற்றினர்.

மொபைலில் வாக்குப்பதிவு விவரம்

திருமங்கலம் அருகில் டி.குண்ணத்தூர் பகுதி பூத் ஒன்றில், வாக்களித்த ஒருவர், தனது மொபைல் போனில் வாக்குப்பதிவு இயந்திரம், அவர் யாருக்கு வாக்களித்தார் என பதிவு செய்து, அவற்றை தனது ஸ்டேட்டஸாக வைத்திருந்தார். இதை அறிந்த போலீஸார் அந்த நபரை பிடித்தனர். சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அலுவலர் புகார் செய்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் தெரிவித்துள்ளார். வடக்குத் தொகுதியிலும் ஒருவர், வாக்குப்பதிவு விவரத்தை மொபைல் போனில் ஸ்டேட்டஸாகப் பதிவிட் டதாகப் புகார் எழுந்துள்ளது.

வாக்குக்கு டோக்கன்?

திருப்பரங்குன்றம் தொகுதிக்குட் பட்ட மேல அனுப்பானடியில் உள்ள பாலையம்பட்டி நாடார் உறவின்முறை பள்ளி ஓட்டுச்சாவடி அருகில் வாக்காளர்களுக்கு அதிமுகவினர் சிலர் வாக்குக்கு டோக்கன் கொடுத்ததாக தெரிகிறது. திமுக கூட்டணிக் கட்சியினர் தடுத் தனர். இச்சம்பவத்தைக் கண்டித்து வேட்பாளர் பொன்னுத்தாயி உள் ளிட்ட கூட்டணிக் கட்சியினர் மறி யல் செய்தனர். புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் உறுதிஅளித்ததால் கலைந்து சென்றனர்.

தேர்தல் அலுவலர் மீது புகார்

திருமங்கலம் தொகுதியில் கட்ராம்பட்டி வாக்குச் சாவடியில் தேர்தல் அலுவலர் ஒருவர் குறிப் பிட்ட ஒரு கட்சிக்கு பெண் களிடம் வாக்குச் சேகரித்ததாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக திமுக, அமமுக வேட்பாளர்கள் தொகுதி தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டனர்.

இளங்கோ மாநகராட்சிப் பள்ளி உள்ளிட்ட வாக்குச்சாவடிகளில் செஞ்சிலுவைச் சங்கத்தினர் மாற்றுத் திறனாளி, வயதான வாக்காளர்களை வரவேற்று, அவர்களை தள்ளு வண்டிகளில் அழைத்துச் சென்று வாக்களிக்க உதவினர். இந்த வாக்குச்சாவடியில் அதிமுகவினர் சிலர் தங்கள் கட்சிக்கு ஆதரவு திரட்டியதால் எதிர்க்கட்சியினர் காவல்துறையிடம் புகார் செய்தனர்.போலீஸார் சமரசம் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x