Published : 07 Apr 2021 03:17 AM
Last Updated : 07 Apr 2021 03:17 AM

திருச்சி மாவட்டத்தில் 9 தொகுதிகளில் - 73.55 சதவீத வாக்குகள் பதிவு :

சட்டப்பேரவைத் தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் 73.55 சதவீத வாக்குகள் பதிவாகின.

திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை, ரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் (தனி) ஆகிய 9 தொகுதிகள் உள்ளன. இவற்றில் 23,38,745 வாக்காளர்கள் உள்ளனர்.

இவர்கள் வாக்களிப்பதற்காக மாவட்டம் முழுவதும் 1,147 வாக்குப்பதிவு மையங்களில் 3,292 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில், பதற்றமானவை எனக் கண்டறியப்பட்ட 156 வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இந்தநிலையில், நேற்று காலை 6.40 மணிக்கு வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் வாக்குச்சாவடி அலுவலர்கள் மூலம் மாதிரி வாக்குப்பதிவு நடத்தி முடிக்கப்பட்டு, வாக்குப்பதிவு இயந்திரங்கள், மின்னணு கட்டுப்பாட்டு இயந்திரங்கள், வாக்களித்ததை உறுதிசெய்யும் இயந்திரங்கள் ஆகியவை சீல் வைக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. முன்னதாக, வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்களுக்கு சுகாதாரத் துறை சார்பில் கிருமிநாசினி, கையுறை ஆகியவை வழங்கப்பட்டன.

தொகுதி வாரியாக பதிவான வாக்குகள் சதவீதம்:

மணப்பாறை 75.87, ரங்கம் 76.09, திருச்சி மேற்கு 67.02, திருச்சி கிழக்கு 66.86, திருவெறும்பூர் 66.75, லால்குடி 79.25, மண்ணச்சநல்லூர் 79.63, முசிறி 76.02, துறையூர் (தனி) 76.63 என மாவட்டத்தில் 73.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x