Published : 07 Apr 2021 03:18 AM
Last Updated : 07 Apr 2021 03:18 AM

கோவில்பட்டி, எட்டயபுரத்தில் - இயந்திரத்தில் பழுது காரணமாக வாக்குப்பதிவு தாமதம் :

கோவில்பட்டி, எட்டயபுரம்,தருவைகுளத்தில் மின்னணு, விவிபாட் ஆகியவற்றில் ஏற்பட்டபழுது காரணமாக வாக்குப்பதிவு தாமதமானது.

கோவில்பட்டி கடலையூர் சாலை லாயல் மில் காலனியில்ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப்பள்ளியில் 3 வாக்குச்சாவடிமையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், வாக்குச்சாவடி எண்156 மற்றும் 159 ஆகியவற்றில் நேற்று காலை மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.

அதன் பின்னர், எண் 156-ல் காலை 7.15 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கும் நேரத்தில் விவிபாட் இயந்திரத்தில் பழுது காரணமாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. பின்னர், சுமார் ஒரு மணி நேரத்துக்கு பின்னர் விவிபேட் இயந்திரம் கொண்டு வரப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது. இதேபோல், எண் 159-ல் விவிபேட் பழுது காரணமாக சுமார் 1.30 மணி நேர தாமதத்துக்கு பின்னர் வாக்குப்பதிவு தொடங்கியது.

இதேபோல், எட்டயபுரம் ராஜாமேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையம் எண் 56-ல் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. தொடர்ந்து,7.15 மணிக்கு வாக்குப்பதிவுதொடங்கிய நேரத்தில் மின்னணுவாக்குப்பதிவு இயந்திரத்தில் பழுது காரணமாக தவறானது (invalid) என வந்தது.

இதையடுத்து 8 மணிக்கு மாற்று இயந்திரம் கொண்டு வரப்பட்டது. அதுவும் சரிவர வேலை செய்யாததால் 8.30 மணிக்கு மற்றொரு இயந்திரம் கொண்டு வந்து பொருத்தி வாக்குப்பதிவு தொடங்கியது.

ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட தருவைகுளம் ஆர்.சி. தொடக்கப்பள்ளியில் 6 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் வாக்குச்சாவடி எண் 70 ல்மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பழுது காரணமாக சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக 8 மணிக்குவாக்குப்பதிவு தொடங்கியது.

வாக்குச்சாவடி எண் 66-ல்முதலில் பொருத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பழுதாகவே, 2-வதாக மற்றொருஇயந்திரத்தை பொருத்தினர். ஆனால், அதுவும் வேலை செய்யாததால், 3-வது மின்னணு இயந்திரம்பொருத்தப்பட்டு சுமார் 2.30 மணி நேரம் தாதமாக காலை 9.30 மணி க்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட வல்லநாடு அருகே உழக்குடியில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் மின்னணுஇயந்திரம் வாக்குப்பதிவு தொடங்கிய 15 நிமிடங்களில் பழுதாகியது. அதன் பின்னர் சுமார் அரைமணி நேரத்துக்கு பின்னர் 2-வதுஒரு இயந்திரம் பொருத்தப்பட்டு, அதுவும் பழுதானது. பின்னர் 3-வதுஇயந்திரம் பொருத்தி வாக்குப்பதிவு தொடர்ந்து நடந்தது.

மின்விளக்கு கூட இல்லை

எட்டயபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடிக்கு வந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாலாஜி, அங்கு அவரது முகவருக்கு அமர இடமில்லாமல் நின்று கொண்டிருந்ததையும், அறையில் மின்விளக்கு இல்லாததையும் கண்டு, வாக்குச்சாவடி அலுவலர்களிடம் கேள்வி எழுப்பினார். இதையடுத்து, மின் விளக்கு பொருத்தப்பட்டது. நாம் தமிழர் கட்சி முகவருக்கு அமர இருக்கை ஒதுக்கப் பட்டது

எண் 159-ல் விவிபேட் பழுது காரணமாக சுமார் 1.30 மணி நேர தாமதத்துக்கு பின்னர் வாக்குப்பதிவு தொடங்கியது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x