Published : 06 Apr 2021 03:15 AM
Last Updated : 06 Apr 2021 03:15 AM

கோவை மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளில் - வாக்காளர்கள் தனி நபர் இடைவெளியுடன் வாக்களிக்க ஏற்பாடு :

கோவை மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் தனி நபர் இடைவெளியில் நின்றுவாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (6-ம் தேதி) நடக்கிறது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்களிக்கலாம். மாவட்டத்தில் 10 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சைகள் என மொத்தம் 137 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மாவட்டத்தில் மொத்தம் 30 லட்சத்து 82 ஆயிரத்து 28 வாக்கா ளர்கள் உள்ளனர்.

மாவட்டம் முழுவதும் மொத்தம் 4,427 வாக்குச்சாவடிகள் உள்ளன. 901 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப் பட்டுள்ளதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவை முன்னிட்டு வாக்குச்சாவடிகளை தயார்படுத்தும் பணி தேர்தல் பிரிவு ஊழியர்க ளால் நேற்று மேற்கொள்ளப்பட்டது. வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கபிரத்யேக மேஜை அமைத்தல், அதற்கு மறைப்புப் பகுதி ஏற்படுத்துதல், வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் அலுவலர்களுக்கான மேஜை,இருக்கை அமைத்தல், முகவர்க ளுக்கான இருக்கைகள் அமைத்தல், பதற்றமான வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமரா பொருத்துதல், வேட்பாளர்களின் விவரங்கள் குறித்த நோட்டீஸை முகப்புப் பகுதியில் ஒட்டுதல், தேவைப்படும் வாக்குச்சாவடிகளில் சாமியானா பந்தல் அமைத்தல் போன்ற பணிகள் நேற்று மேற்கொள்ளப்பட்டன.

வாக்குச்சாவடியில் தேர்தல் பிரிவு ஊழியர்கள் பயன்படுத்தத் தேவையான 22 வகையான ஸ்டேஷ னரி பொருட்கள், 10 வகையான அத்தியாவசியப் பொருட்கள், 15 வகையான படிவங்கள், 25 வகையான கவர்கள் போன்றவை நேற்றுஅனுப்பி வைக்கப்பட்டன.

நடக்கமுடியாத வயதானவர் கள் வாக்களிக்க வந்தால், அவர்களை மையத்துக்கு அழைத்துச் செல்ல தேவையான சக்கர நாற்காலிகள், கண் பார்வையற்றவர்கள், பார்வைத் திறன் குறைபாடு உடையவர்கள் வாக்களிக்க ஏதுவாக ‘பிரெய்லி பேலட் ஷீட்’ படிவங்கள் ஆகியவை வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மேலும், கரோனா அச்சத்தின் காரணமாக, பாதுகாப்பு கவச உடை, கையுறைகள், கிருமிநாசினி மருந்து ஆகியவையும் தேவை யான எண்ணிக்கையில் வாக்குச்சாவடிகளுக்கு சுகாதாரத்துறையினர் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள் ளது. கரோனா அச்சம் காரணமாக வாக்காளர்கள் முகக்கவசம் அணிந்து வர வேண்டும், தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

வாக்குச்சாவடியில் வாக்காளர் கள் சமூக இடைவெளியுடன் நின்று வாக்களிக்க ஏதுவாக அடையாளக் குறியீடுகள் வரையப்பட்டுள்ளன. குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் வாக்குச்சாவடியில் உள்ளாட்சித் துறையின் சார்பில் செய்யப்பட் டுள்ளன.

பத்து தொகுதிகளிலும், தலா ஒருவாக்குச் சாவடி முழுக்க முழுக்கபெண் ஊழியர்கள் பணிபுரியும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள் ளன. சித்தாப்புதூர் மாநகராட்சிப் பள்ளி வளாகத்தில் உள்ள வாக்குச்சாவடி வண்ண பலூன்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x