Published : 06 Apr 2021 03:15 AM
Last Updated : 06 Apr 2021 03:15 AM

மதுரை மாவட்டத்தில் பதற்றமான - 1,330 வாக்குச்சாவடிகளில் துணை ராணுவ பாதுகாப்பு :

மதுரை மாவட்டத்தில் பதற்ற மானவை எனக் கண்டறியப்பட்ட 1,330 வாக்குச்சாவடிகளுக்கு துணை ராணுவப்படை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இரவு 7 மணிக்கு வாக்குப்பதிவு முடிந் ததும் 4 இடங்களில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களுக்கு வாக்கு பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட உள்ளன.

சட்டப்பேரவைத் தேர்தல் இன்று நடக்கிறது. மதுரை மாவட்டத்தில் 10 சட்டப்பேரவை தொகுதிகளில் மொத்தம் 3,856 வாக்குச்சாவடிகள் 1,169 இடங்களில் அமைக்கப்பட் டுள்ளன. 178 வேட்பாளர்கள் களத் தில் உள்ளனர்.

சோழவந்தான், திருப்பரங் குன்றம், திருமங்கலம் ஆகிய தொகுதிகளில் 15 வேட்பாளர் களுக்கும் அதிகமாகப் போட்டி யிடுவதால் அங்கு 2 வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப் படுகின்றன. மொத்தம் 5,021 வாக்குப்பதிவு இயந்திரங்கள், தலா 3,856 கட்டுப்பாட்டு இயந்திரம் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவசரத் தேவைக்கு 20% இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 311 மண் டலங்களாகப் பிரிக்கப்பட்டு அலுவலர்கள் நியமிக்கப்பட் டுள்ளனர். 1,330 வாக்குச் சாவ டிகள் பதற்றமானவைகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

இங்கு துணை ராணுவப்படை உள்ளிட்ட கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. 5 ஆயிரத் துக்கும் அதிகமான காவலர்கள் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மதுரை மாநகராட்சி மற்றும் இதர தேர்தல் அலுவலகங்களிலிருந்து பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குப்பதிவு மையங்களுக்கு அனுப்பப்பட்டன.

முன்னதாக 18,510 ஊழியர் களுக்கு இறுதிப் பயிற்சி நேற்று அளிக்கப்பட்டது. உடன் கணினி மூலம் குலுக்கல் முறையில் வாக்குச் சாவடிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உத்தரவுகள் வழங்கப்பட்டன. இந்த உத்தரவுடன் ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு நேற்று மதியமே அனைத்து ஊழியர்களும் சென்றடைந்தனர். அவர்களிடம் வாக்குப்பதிவு இயந் திரங்களை தேர்தல் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

வாக்குப்பதிவுக்கு தயாராகும் வகையில், அனைத்து ஏற்பாடுக ளையும் தேர்தல் அலுவலர்கள் மேற்கொண்டனர். இன்று காலை 7 மணிக்கு அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்குப்பதிவு தொடங்குகிறது. முன்னதாக மாதிரி வாக்குப்பதிவு, வேட் பாளர்களின் முகவர்கள் முன்னி லையில் நடக்கும். கரோனா பாதுகாப்பு விதிமுறைகளின்படி வாக்காளர்களை அனுமதிக்க அறி வுரை வழங்கப்பட்டுள்ளது.

ஏற்பாடுகளை தேர்தல் பார்வை யாளர்கள், மதுரை மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன், காவல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா, எஸ்பி சுஜித்குமார் ஆகியோர் பார்வையிட்டனர்.

இரவு 7 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்ததும் பலத்த பாதுகாப்புடன் 4 இடங்களில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு வாக்குகள் பதிவான இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x