Published : 06 Apr 2021 03:16 AM
Last Updated : 06 Apr 2021 03:16 AM

பெரம்பலூர் மாவட்டத்தில் - தேர்தல் பாதுகாப்பு பணியில் 1,434 பேர் :

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று (ஏப்.6) நடைபெறம் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பாதுகாப்பு பணியில் போலீஸார், துணை ராணுவத்தினர், ஊர்க்காவல் படையினர் என 1,434 பேர் ஈடுகின்றனர்.

இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ப.வெங்கட பிரியா தெரிவித்துள் ளது:

பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 428 வாக்குச்சாவடி மையங்கள், குன்னம் தொகுதியில் 388 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பெரம்பலூர் தொகுதியில் 79 வாக்குச்சாவடிகள், குன்னம் தொகுதியில் 96 வாக்குச் சாவடி கள் என மொத்தம் 175 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. அங்கு தேர்தல் நுண்பார்வையாளர்கள் மற்றும் வெப் கேமரா மூலம் வாக்குப்பதிவு கண்காணிப்பு, துணை ராணுவத்தினர் பாதுகாப்பு என கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தேர்தல் பாதுகாப்பு பணியில் ஏடிஎஸ்பிக்கள், டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள் மற்றும் உள்ளூர் போலீஸார், ஆயுதப்படை போலீஸார், சிறப்பு காவல்படை போலீஸார், துணை ராணுவத்தினர், முன்னாள் ராணுவத்தினர், ஊர்க் காவல்படை வீரர்கள், தீயணைப்பு படை வீரர்கள், முன்னாள் வனக் காவலர்கள், ஓய்வுபெற்ற தீயணைப்பு துறையினர், ஓய்வு பெற்ற சிறைத்துறை காவலர்கள், என்சிசி மாணவர்கள் என மொத்தம் 1,434 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர் என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x