Published : 05 Apr 2021 03:14 AM
Last Updated : 05 Apr 2021 03:14 AM

ஒரு நாளைக்கு : 37 கி.மீ. துாரத்துக்கு : நெடுஞ்சாலை பணி :

கடந்த 2014 ஏப்ரல் நிலவரப்படி தேசிய நெடுஞ்சாலை 91,287 கிலோ மீட்டராக இருந்தது. இது மார்ச் 2021-ல் 1,37,625 கிலோ மீட்டராக உயர்ந்துள்ளது. 2021-ல் ஒரு நாளைக்கு கட்டுமானம் செய்யப்படும் நெடுஞ்சாலை தொலைவு 37 கிலோ மீட்டராக உயர்ந்துள்ள தாக மத்திய நெடுஞ்சாலைத் துறை தெரிவித்துள்ளது.

நெடுஞ்சாலை துறைக்காக 2021-22 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரூ.1,83,101 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதே நிதி ஒதுக்கீடு 2015ல் ரூ.33,414 கோடியாக மட்டுமே இருந்தது. அந்தவகையில் இந்த ஆண்டு ஒதுக்கீடானது 5.5 மடங்கு உயர்ந்துள் ளது என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.

அதேசமயம் நெடுஞ்சாலை திட்டங்களுக்காகப் பகிரப்பட்ட நிதி 2020 ஆண்டைக் காட்டிலும் 126 சதவீதம் உயர்ந்துள்ளது என்று நெடுஞ்சாலைத் துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x