Published : 05 Apr 2021 03:16 AM
Last Updated : 05 Apr 2021 03:16 AM

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ‘அனல்’பறந்த வேட்பாளர்களின் இறுதிக்கட்ட பிரச்சாரம் :

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளான நேற்று அனைத்து வேட்பாளர்களும் கொளுத்தும் வெயிலில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளான நேற்று வெயில் வாட்டி எடுத்த நிலையில் அனைத்து கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களும் வெயிலை பொருட்படுத்தாமல் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் அசோக்குமார், காவேரிப்பட்டணம் மற்றும் சுற்று வட்டாரங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு கிருஷ்ணகிரியில் நிறைவு செய்தார்.

இதேபோல, திமுக வேட்பாளர் செங்குட்டுவன், காவேரிப்பட்டணம் சுற்று வட்டார கிராமங்களில் வாக்கு சேகரித்தார். மாலை கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண் டானாவில் திமுக பொதுக்கூட்டம் நடந்தது.இதில், திரைப்பட நகைச்சுவை நடிகர் இமான் அண்ணாச்சி பங்கேற்றார்.

பர்கூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கிருஷ்ணன், கிராமங்களில் வாக்கு சேகரித்தார். பர்கூரில் தனது தேர்தல் பிரச்சாரத்தை நிறைவு செய்தார். இதேபோல பர்கூர் திமுக வேட்பாளர் மதியழகன், போச்சம்பள்ளி, பர்கூர் சுற்றுவட்டார கிராமபுற மக்களிடையேவாக்கு சேகரிப் பில் ஈடுபட்டு பர்கூரில் பிரச்சாரத்தை நிறைவுசெய்தார்.

வேப்பனப்பள்ளி அதிமுக வேட்பாளர் கே.பி.முனுசாமி, தீர்த்தம், நேரலகிரி, நாச்சி குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்த அவர், வேப்பனப்பள்ளியில் பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.

இதேபோல, திமுக வேட் பாளர் முருகன், ராயக் கோட்டை, சூளகிரி சுற்று வட்டாரப் பகுதிகளில் இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர் வேப்பனப்பள்ளியில் நிறைவு செய்தார்.

ஊத்தங்கரை தொகுதி அதிமுக வேட்பாளர் தமிழச் செல்வன் வாக்குசேகரித்து, ஊத்தங்கரையில் நிறைவு செய்தார்.

இதே போல, காங்கிரஸ் வேட்பாளர் ஆறுமுகம் ஊத்தங்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகள், ரெட்டிப்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில உள்ள கிராமங்களில் இறுதிகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு, மிட்டப் பள்ளியில் பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x