Published : 05 Apr 2021 03:16 AM
Last Updated : 05 Apr 2021 03:16 AM

பேராவூரணி திமுக வேட்பாளரை ஆதரித்து எம்.பி பழநிமாணிக்கம் வாக்கு சேகரிப்பு :

பேராவூரணி தொகுதி திமுக வேட்பாளர் என்.அசோக்குமாரை ஆதரித்து, மல்லிப் பட்டினத்தில் நேற்று முன்தினம் பிரச்சாரம் செய்கிறார் எம்.பி பழநிமாணிக்கம்.

தஞ்சாவூர்: பேராவூரணி தொகுதி திமுக வேட்பாளர் என்.அசோக்குமாரை ஆதரித்து, மல்லிப்பட்டினம் கடைவீதியில் நேற்று முன்தினம் பிரச்சாரம் செய்த திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினரும், எம்.பியுமான எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் பேசியது:

டெல்டா மாவட்டங்களில் கஜா புயலால் பொதுமக்கள், மீனவர்கள், விவசாயிகள் பாதிக்கப்பட்டபோது, முதல்வர் பழனிசாமி உடனடியாக ஓடிவராமல், சொந்த ஊரில் கிடாவெட்டு பூஜை முடிந்து, 5 நாட்களுக்குப் பிறகுதான் பட்டுக்கோட்டைக்கு வந்து எட்டிப் பார்த்தார். இந்தத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதும், மீனவர் கிராமங்களில் தேவையான இடங்களில் தூண்டில் வளைவுகள் அமைக்கப்படும். மீன்பிடி தடைக்கால நிவாரணம் உயர்த்தி வழங்கப்படும். குளிர்பதன மீன் சேமிப்புக் கிடங்கு அமைக்கப்படும். கடற்கரை முகத்துவாரங்கள் தூர் வாரப்படும். மானிய விலை டீசல் 2 ஆயிரம் லிட்டராக உயர்த்தப்படும். மகளிர் சுயஉதவிக் குழு கடன் ரத்து செய்யப்படும். திமுக தனது தேர்தல் அறிக்கையில் சொன்னதையெல் லாம் நிறைவேற்றியது. ஆனால், அதிமுக, பாஜக அரசுகள் சொன்ன வாக்குறுதிகளை தொட்டுக்கூட பார்க்கவில்லை. எனவே, திமுக வேட்பாளர் அசோக்குமாருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x