Published : 05 Apr 2021 03:16 AM
Last Updated : 05 Apr 2021 03:16 AM

மீனவர்களிடம் டீசலுக்கு - சாலைவரி வசூலிப்பதை ரத்து செய்ய நடவடிக்கை : குமரி பிரச்சாரத்தில் காங். வேட்பாளர் விஜய் வசந்த் வாக்குறுதி

ராமனாதிச்சன்புதூர் பகுதியில் முதியவர்களிடம் வாக்கு சேகரித்த கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த்.

நாகர்கோவில்

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் புதுக்கிராமம் பகுதியில் இருந்து நேற்று தனது இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். தொடர்ந்து முட்டத்தில் மீனவர்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார். அப்போது அவர் பேசியதாவது: மக்களுக்கு சேவை செய்வதில் எனது தந்தையின் கனவுகளை நிறைவேற்றப் பாடுபடுவேன். அதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். குமரியில் ரப்பர் தொழிற்சாலை, தரமான சாலைகள், தொழில்நுட்ப பூங்கா அமைக்க முயற்சிப்பேன்.

மத்தியில் ஆளும் அரசானது மீனவ சமூகத்துக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதை நிரூபிக்கும் வகையில் கன்னியாகுமரியில் தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் வளர்ச்சிக்கு துறைமுகங்கள் தேவைப்படுகிறது. துறைமுகங்கள் வந்தால் தான் வளர்ச்சி வரும் என்கிறார்.

துறைமுகம் அமைத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் போய்விடும் என்பதில்அவருக்கு துளியும் வருத்தம் இல்லை.

எனது தந்தை நாடாளு மன்றத்தில் முதல் கேள்வியே மீனவர்களுக்காகத்தான் எழுப் பினார். மாயமாகும் மீனவர்களைத் தேட ஹெலிகாப்டர் தளம் வேண்டும் என்று அவர் வைத்த கோரிக்கை இன்னும் நிலுவையில் இருக்கிறது. கடற்கரை கிராமங் களுக்கு தூண்டில் வளைவு அமைத்துக் கொடுப்பேன். அதிமுக ஆட்சியில் ஏற்கெனவே கட்டிய தூண்டில் வளைவுகள் சரியாக அமைக்காததால் கடலரிப்பு இருக்கிறது. அவற்றை சீரமைப் பேன். கடற்கரைச் சாலைகளை உலகத்தரத்தில் அமைப்பேன்.

மீனவர்கள் படகை இயக்கும் இன்ஜின் பயன்பாட்டுக்காக டீசல் வாங்கி கடலில் போய் மீன் பிடிக்கின்றனர். சாலையையே பயன்படுத்தாத மீனவர்களிடம் டீசலுக்கு சாலைவரி வசூலிப்பதை ரத்து செய்ய குரல் கொடுப்பேன்’’ என்றார்.

தொடர்ந்து தேவகுளம், கண்ணன்பதி, பத்மநாபன்புதூர், ராமனாதிச்சன்புதூர், அமராவதி விளை, பொட்டல்குளம் உட்பட பல்வேறு பகுதிகளிலும் அவர் பிரச்சாரம் செய்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x